Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யாரு சாமி நீ.. இந்திய அணியை மீண்டும் காப்பாற்றிய சிங்கத்தமிழன்.. அஸ்வின் போராட்டத்தால் திணறிய எதிரணி

சட்டோகிராம்: வங்கதேச அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் சரிவில் இருந்த இந்திய அணியை ரவிச்சந்திரன் அஸ்வின் போராடி காப்பாற்றியுள்ளார்.

இரு அணிகளுக்கும் இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் சட்டோகிராம் மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மோசமாக சொதப்பி ஏமாற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஓப்பனிங் ஏமாற்றம்

ஓப்பனிங் ஏமாற்றம்

ஒப்பனிங் வீரர்கள் கே.எல்.ராகுல் 22 ரன்களுக்கும், சுப்மன் கில் 20 ரன்களுக்கும் அடுத்தடுத்து அவுட்டாகி ஏமாற்றினர். நம்பிக்கை நட்சத்திரமாக பார்க்கப்பட்ட விராட் கோலி வெறும் ஒரு ரன்னிற்கு அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். இதனால் 41 /0 என இருந்த இந்திய அணி 48/3 என தடுமாறியது.

மிடில் ஆர்டர் பேட்டிங்

மிடில் ஆர்டர் பேட்டிங்

இதன் பின்னர் வந்த சட்டீஸ்வர் புஜாரா 90 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 86 ரன்களும் அடித்து இந்திய அணியை காப்பாற்றினர். எனினும் இந்திய அணி ஒரு வலுவான இடத்திற்கு செல்லவில்லை. முதல் நாளின் முடிவில் இந்தியா 278 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து ஆடி வந்தது. இதனால் 300 ரன்களாவது வந்துவிடுமா என ரசிகர்கள் சந்தேகத்துடன் இருந்தனர்.

காப்பாற்றிய அஸ்வின்

காப்பாற்றிய அஸ்வின்

இந்நிலையில் நான் இருக்கிறேன் என ரவிச்சந்திரன் அஸ்வின் கெத்து காட்டியுள்ளார். 8வது வீரராக களமிறங்கிய அவர், மிகவும் நேர்த்தியான பேட்டிங்கால் இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டுக்கொண்டு வந்தார். வங்கதேச பவுலர்களுக்கு எந்த இடத்திலும் வாய்ப்பை கொடுக்காமல் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 13வது அரைசதத்தை பூர்த்தி செய்தார். அஸ்வின் மட்டும் ஆடாமல், நான் ஸ்ட்ரைக்கில் இருந்த குல்தீப் யாதவுக்கும் டிப்ஸ் கொடுத்து பெரிய பார்ட்னர்ஷிப்பிற்கு கொண்டு சென்றுள்ளார்.

அஸ்வினின் ரெக்கார்ட்

அஸ்வினின் ரெக்கார்ட்

அஸ்வின் இதுபோன்று இந்தியாவை காப்பாற்றுவது முதல்முறையல்ல. இதுவரை 87 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் 2,960 ரன்களையும் கடந்து விளையாடி வருகிறார். இதில் 13 அரைசதங்களும், 5 சதங்களும் அடங்கும். இந்த அட்டகாச ரெக்கார்ட் பெரும்பாலும் 8வது வீரராக களமிறங்கி அடித்தவையே என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, December 15, 2022, 12:44 [IST]
Other articles published on Dec 15, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+