கொல்கத்தா : சொந்த நாட்டில் புலி வெளிநாட்டில் எலி என்பது போல் வங்கதேச கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது. கடந்த ஆண்டு இறுதியில் சொந்த மண்ணில் இந்தியாவை இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் தோற்கடித்த வங்கதேசம் அணி நடப்பு உலக கோப்பை தொடரில் வெறும் ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது.
இதனால் புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது. இன்றைய ஆட்டத்திலும் வங்கதேச அணி பேட்டிங்கில் சொதப்பி வெறும் 204 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்த இலக்கை பாகிஸ்தான அணி 32.3 ஓவர்கள் எல்லாம் எட்டினர்.

இந்த நிலையில் வங்கதேச அணி கேப்டன் ஷகிபுல் ஹசன் தங்களது வீரரை கடுமையாக சாடினர். இது குறித்து பேசிய அவர் நாங்கள் பேட்டிங்கில் போதுமான ரன்களை எடுக்கவில்லை. ஆனால் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக தான் இருந்தது. மீண்டும் நாங்கள் ஆரம்ப கட்டத்தில் விக்கெட்டுகளை இழந்தோம். எங்கள் பேட்ஸ் மேன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். எனினும் அது பெரிய அளவில் இல்லை.
எங்களுடைய பேட்டிங்கை நினைத்தாலே மிகவும் ஏமாற்றமாக இருக்கிறது. பாகிஸ்தான் அணிக்கு என்னுடைய பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஏனென்றால் அவர்கள் முதல் 10 ஓவர்களில் சிறப்பாக பந்து வீசினர். பேட்டிங்கும் செய்தனர். பேட்டிங் வரிசை குறித்து நாங்கள் யோசிக்க வேண்டும். ஏனென்றால் முதல் நான்கு வீரர்கள் பேட்டிங் வரிசையில் சரியாக விளையாடுவதில்லை.

நானும் ரன்கள் சேர்ப்பதில்லை. என்னுடைய தன்னம்பிக்கையும் மிகவும் குறைந்த அளவில் இருந்தது. எனினும் இன்று எனக்கு ரன்கள் கிடைத்தது. தற்போது கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறது. எனினும் எங்கள் அணியில் நாங்கள் தற்போது பெரிய அளவில் மாற்றத்தை நிகழ்த்த முடியாது. தோல்வியை அடைந்தாலும் அடுத்தது என்ன நடக்கப் போகிறது என்பது குறித்து யோசிக்க வேண்டும்.ஒரு அணியாக நாங்கள் அனைவரும் சிறப்பாக விளையாட வேண்டும்.
ஒருங்கிணைந்த விளையாட வேண்டும், ஆனால் அது தற்போது நடக்கவில்லை. இன்னும் இரண்டு போட்டிகள் இருக்கிறது. அதில் வெற்றி பெற்று மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டும். நாங்கள் எங்கு சென்று விளையாடுகிறோமோ அங்கெல்லாம் எங்களுடைய ரசிகர்கள் எங்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள். அவர்களுடைய முகத்தில் நாங்கள் சிரிப்பை கொண்டு வர வேண்டும். அவர்களுக்கு நாங்கள் ஏதாவது செய்ய வேண்டும் என்று வங்கதேச கேப்டன் ஷகிபுல் ஹசன் கூறினார்.