கிரிக்கெட் சூதாட்டம்: வங்கதேச வீரருக்கு 8 ஆண்டு தடை

"முகமது அஷ்ரஃபுல் மீது சுமத்தப்பட்ட நான்கு குற்றச்சாட்டுகளும் உண்மை என்று தெரியவந்துள்ளதால் அவருக்கு எட்டு ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்படுகிறது" என்று வங்கதேச கிரிக்கெட் வாரிய சிறப்பு விசாரணை குழு தலைவர் கதேமுல் இஸ்லாம் சவுத்ரி, நிருபர்களிடம் தெரிவித்தார்.
மேலும், அபராதமாக 1 மில்லியன் டாக்கா, அதாவது 12,820 அமெரிக்க டாலர்களை செலுத்த வேண்டும் என்றும் சவுத்ரி தெரிவித்தார்.
2007 முதல் 2009ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டனாக பதவி வகித்தவர் முகமது அஷ்ரஃபுல். கடந்தாண்டு நடைபெற்ற உள்ளூர் டி20 போட்டித்தொடரில் (BPL) டாக்கா கிளாடியேட்டர் மற்றும் சிட்டகாங் கிங் அணிகளுக்கு நடுவே நடந்த போட்டியில் சூதாட்டம் நடைபெற்றதாகவும், அதில் முகமது அஷ்ரஃப்ஹுல்லுக்கு தொடர்புள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஊழல் ஒழிப்பு அதிகாரிகள், முகமது அவரிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து பகிரங்கமாக தொலைக்காட்சி சானல் ஒன்றில் முகமது அஷ்ரஃபுல் மன்னிப்பு கேட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications