Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2026 டி20 உலககோப்பை: வங்கதேச அணி கேப்டனாக ஹிந்து மத வீரர் நியமனம்..கலவரத்துக்கு மத்தியில் நெகிழ்ச்சி

டாக்கா: 2026 டி20 உலகக் கோப்பைக்கான வங்கதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டனாக லிட்டன் தாஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். பிப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை நடைபெறும் இத்தொடரில், அதிக ரன் குவித்த விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனான லிட்டன் தலைமை வகிக்கிறார்.லிட்டன் ஏற்கனவே பங்களாதேஷ் டி20 அணியின் முழுநேர கேப்டன்தான். ஆனால், இந்துக்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்துவான லிட்டன் டாஸ் நியமிக்கப்பட்டு இருப்பது கவனத்தைப் பெற்றுள்ளது.

சைஃப் ஹசன் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதிக விக்கெட் எடுத்த முஸ்தஃபிசுர் ரஹ்மான், ரிஷாத் ஹுசைன், டாஸ்கின் அகமது, தவ்ஹித் ஹ்ரிடோய் ஆகியோரும் 15 பேர் கொண்ட அணியில் இடம்பெற்றுள்ளனர்.ஆச்சரியப்படும் விதமாக, 2025 ஆசிய கோப்பை சூப்பர் 4 போட்டியில் பங்களாதேஷை வழிநடத்திய விக்கெட் கீப்பர் ஸாகர் அலிக்கும், முன்னாள் கேப்டன் நஜ்முல் ஹுசைன் ஷான்டோவுக்கும் அணியில் இடமில்லை.

Litton Das

முஸ்தபிசுர் ரஹ்மான் இந்தியாவில் விளையாட எதிர்ப்பு எழுந்த நிலையில், அவர் ஐபிஎல் தொடரில் இருந்து நீக்கப்பட்டார். இதன் காரணமாக, டி20 உலககோப்பையில் வங்கதேச அணி, இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

டி20 உலகக் கோப்பை 2026க்கான வங்கதேச அணி: லிட்டன் குமர் தாஸ் (கேப்டன்), தன்ஜித் ஹசன், முகமது பர்வேஸ் ஹுசைன் இமோன், முகமது சைஃப் ஹசன், எம்.டி. தவ்ஹித் ஹ்ரிடோய், எம்.டி. ஷமிம் ஹுசைன், குவாஸி நூருல் ஹசன் சோஹன், ஷாக் மெஹிதி ஹசன், எம்.டி. ரிஷாத் ஹுசைன், நசும் அகமது, எம்.டி. முஸ்தஃபிசுர் ரஹ்மான், எம்.டி. தன்ஸிம் ஹசன் சாகீப், டாஸ்கின் அகமது, எம்.டி. ஷைஃப் உதின், எம்.டி. ஷோரிஃபுல் இஸ்லாம்.

2026 டி20 உலகக் கோப்பையில், பங்களாதேஷ் 'சி' பிரிவில் இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள், இத்தாலி, நேபாளத்துடன் இணைந்துள்ளது. இப்பிரிவில் சவாலான போட்டிகளை எதிர்கொள்ளும்.பிப்ரவரி 7 அன்று கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸில், பங்களாதேஷ் தனது முதல் லீக் போட்டியில் இரண்டு முறை சாம்பியனான மேற்கிந்திய தீவுகளை எதிர்கொள்கிறது. பிப்ரவரி 9 அன்று அதே மைதானத்தில் இத்தாலியுடன் மோதும்.

'சி' பிரிவில் மூன்றாவது போட்டி பிப்ரவரி 14 அன்று இங்கிலாந்துக்கு எதிராக ஈடன் கார்டன்ஸில் நடைபெறும். இறுதிப் போட்டி மும்பையின் வான்கடே மைதானத்தில் நேபாளத்துடன் திட்டமிடப்பட்டுள்ளது.டி20 உலகக் கோப்பையின் அரையிறுதிக்கு பங்களாதேஷ் அணி இதுவரை முன்னேறியதில்லை. 2026-ல் அவர்கள் அரையிறுதியை எட்டுவார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Story first published: Sunday, January 4, 2026, 13:41 [IST]
Other articles published on Jan 4, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+