இந்தியாவை பழிவாங்க பிட்சில் கை வைத்த வங்கதேசம்.. இது மோசமான யுக்தி.. முறியடிக்குமா ராகுல் படை
சிட்டங்காங் : இந்தியா, வங்கதேசஅணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை காலை இந்திய நேரப்படி 9.00 மணிக்கு தொடங்குகிறது.
இந்தப் போட்டி சட்டோகிராமில் உள்ள ஜாகுர் அகமது சௌத்ரி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்திய அணியை பொறுத்தவரை வங்கதேசத்திற்கு எதிரான தொடரை முழுமையாக கைப்பற்ற வேண்டும்.
அப்போது தான், உலக டெஸ்ட் தொடர் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற முடியும். இது வரை டெஸ்ட் வரலாற்றில் வங்கதேச அணி , இந்தியாவை வீழ்த்தியது இல்லை.

ஆடுகளம்
இப்போதும் அதற்கு வாய்ப்பு இல்லை. இதனால், இந்தியாவை பழிவாங்க, வங்கதேச கிரிக்கெட் வாரியம் ஒரு மோசமான யுக்தியை கையாள உள்ளது. அதாவது, இந்தியாவை டெஸ்ட் போட்டியில் வீழ்த்துவது எளிதான காரியம் அல்ல. அதே சமயம், இந்தியாவுக்கு இந்த தொடரில் வெற்றி வேண்டும். இதனால், இந்தியாவை வெற்றி பெற விடகூடாது என்பதற்காக பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தை பயன்படுத்த வங்கதேசம் முடிவு எடுத்துள்ளது.

பேட்ஸ்மேன்களின் சொர்க்கம்
இதன் மூலம், இந்திய அணிவீரர்களால் 20 விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் போகலாம். இதனால் போட்டி சமனில் முடிய வாய்ப்பு உள்ளது. தற்போது அமைக்கப்பட்டுள்ள ஆடுகளத்தை பார்வையிட்ட வங்கதேச அணியின் பயிற்சியாளர் கூட , இதனை பேட்ஸ்மேன்களின் சொர்க்கம் என்று பாராட்டியுள்ளார்.

முறியடிக்குமா இந்தியா?
எப்படி பாகிஸ்தான், ராவல்பிண்டியில் ஒரு மட்டமான ஆடுகளத்தை தயாரித்ததோ, அதே போல் வங்கதேசமும் இந்த அடுகளத்தை தயாரித்துள்ளது. வங்கதேசத்தின் இந்த யுக்தியை உடைக்க வேண்டும் என்றால், இந்தியாவும் தங்களுடைய ஆட்டத்தின் ஸ்டைலை மாற்ற வேண்டும். பேட்டிங்கில் அதிரடியாகவும், வேகமாக ரன் குவித்து. வங்கதேச விக்கெட்டுகளை வீழ்த்த ஆக்கோரஷமாக பந்துவீச வேண்டும்.

சமனில் முடிய வாய்ப்பு
டெஸ்ட் போட்டிக்கு ஏற்ற இலக்கணத்துடன் போட்டியில் இந்தியா விளையாடினால் நிச்சயம், இந்த ஆட்டம் சமனில் முடியவே வாய்ப்பு உள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் எச்சரித்துள்ளர். ஆடுகளம் மட்டும் டெஸ்ட் போட்டிக்கு சாதகமாக இல்லை என்றால், ஐசிசி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Click it and Unblock the Notifications