கொல்கத்தா : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் கத்துக்குட்டி அணி என்று அழைக்கப்பட்ட நெதர்லாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேசம் ஆகிய பலமான அணிகளை வீழ்த்தியது. கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இரு அணிகளும் மோதியது.
இதில் வங்கதேச அணி சிறப்பாக செயல்பட்டு நெதர்லாந்து அணியை 63 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழக்க வைத்தது. எனினும் நெதர்லாந்து கேப்டன் ஸ்காட் எட்வேர்ட்ஸ் ரன் ஏதும் எடுக்காத நிலையில் மூன்று பந்து இடைவெளியில் இரண்டு முறை வங்கதேச வீரர்கள் அவருடைய கேட்ச் வாய்ப்பை தவறவிட்டனர்.

இதனை பயன்படுத்திக் கொண்ட எட்வர்ட்ஸ் அதிகபட்சமாக 68 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் வங்கதேசத்துக்கு 230 ரன்கள் என்று எளிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வங்கதேச வீரர்கள் பேட்டிங் செய்தனர். ஆனால் அவர்கள் 42.2 ஓவர்களில் எல்லாம் 142 ரன்கள் ஆட்டம் இழந்தனர். இதில் நெதர்லாந்து வீரர் பால் வான் மீக்ரம் 23 ரன்கள் விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதன் மூலம் வங்கதேச அணி தற்போது புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தை இருக்கிறது. நெதர்லாந்துக்கு எதிராக 87 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணி தோல்வியை தழுவியது. தங்கள் உலகக்கோப்பை வரலாற்றிலேயே மிக மோசமான தோல்வி ஆகும் என அந்த அணி கேப்டன் ஷகிபுல் ஹாசன் விமர்சித்திருக்கிறார்.இந்த நிலையில் இந்த போட்டியை காண வந்த வங்கதேச ரசிகர் ஒருவர் நெதர்லாந்து அணிக்கு எதிராக தங்களது வீரர்கள் தோல்வியை தழுவியதால் ஆத்திரமடைந்து செருப்பை எடுத்துக்கொண்டு தன்னைத்தானே அடித்துக் கொண்டார்.

பெரிய அணிகளுக்கு எதிராக தோற்றால் கூட பரவாயில்லை, நெதர்லாந்துக்கு எதிராக நீங்கள் எவ்வாறு தோற்கலாம் என்று கூறிக் கொண்டே அவர் செருப்பை எடுத்து அடித்தார். மேலும் இந்த போட்டியை பார்ப்பதற்காக வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு வந்து பல இன்னல்களை சந்தித்து ஹோட்டல்கள் கிடைக்காமல் மிகவும் அல்லாடியதாகவும், ஆனால் அதற்கு தகுந்தார் போல் வங்கதேச வீரர்கள் சரியாக விளையாடாமல் தோல்வியை தழுவி விட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.