தினேஷ் கார்த்திக் ரன் அவுட்.. நடுவர்களின் தவறு குறித்து வாய் திறப்பார்களா வங்கதேசம் ? முழு விவரம்
சிட்னி : டி20 உலககோப்பையில் வங்கதேசத்துக்கு எதிரான முக்கிய லீக் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது.
66 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி இருந்த வங்கதேசம், அடுத்த 54 பந்துகளில் கைவசம் 10 விக்கெட் இருந்தும் 85 ரன்கள் அடிக்க முடியாமல் தோற்றது.
இப்படி மோசமாக விளையாடி விட்டு, விராட் கோலியின் Fake fielding ஆல் எங்களுக்கு தரப்பட வேண்டிய 5 ரன்களை நடுவர்கள் கொடுக்கவில்லை. மைதானம் ஈரமாக இருந்ததால் தான் தோற்றோம் என்று வங்கதேசம் சப்பை கட்டு கட்டுகிறது.

வங்கதேசத்தின் குற்றச்சாட்டு
Fake Fielding விவகாரத்தில் 5 ரன்கள் கொடுத்திருக்க வேண்டிய ஒன்று தான். ஆனால், அது குறித்து அப்போதே நடுவரிடம் முறையிடாமல் தூங்கிவிட்டு போட்டி முடிந்த உடன் அதனை ஒரு காரணமாக தூக்கி வருவது சின்னப்பிள்ளை தனமான ஒன்று. மேலும், Fake fielding குறித்து நடுவர் கவனிக்காததை தவறு என்று சொல்லாமல், ஏதோ நடுவர்கள் இந்தியாவுக்கு சாதகமாக செயல்பட்டதாக பொய்யை அந்நாட்டு ரசிகர்கள் பரப்பி வருகின்றனர்.

ஏன் முறையிடவில்லை
விராட் கோலி பேட்டிங் செய்யும் போது 2வது பவுன்சர் வீசப்பட்ட போது, கோலி நடுவரிடம் முறையிட்டார்,. அதன் பிறகு தான் கிடைத்தது. வங்கதேசம் ஏன் முறையிடவில்லை. நடுவர்களிடம் பேச ஆங்கிலம் தெரியவில்லையா என்று இந்திய ரசிகர்களும் பதிலடி தந்தனர் நேற்று இந்தியா பேட்டிங் செய்யும் போதும் கூட நடுவர்கள் ஒரு பெரிய தவறு செய்தனர். அதனை யாரும் இந்திய ரசிகர்கள் ஒரு காரணமாக சொல்லவில்லை.

திருப்புமுனை
இந்தியா பேட்டிங் செய்யும் போது தினேஷ் கார்த்திக் ஆட்டமிழந்தது பெரும் திருப்புமுனையாக அமைந்தது. ஆட்டத்தின் 17வது ஓவரில் கடைசி பந்தில் சோரிஃபுல் இஸ்லாம், பந்துவீசும் போது விராட் கோலி ரன் ஓட முயன்றார். ஆனால் பந்தை ஃபில்டர் பிடித்ததை பார்த்த உடன், கோலி ரன் ஓடுவதை நிறுத்திவிட்டார். இதனால் பாதி தூரம் வந்த தினேஷ் கார்த்திக், மீண்டும் Non striker கிரீஸ் நோக்கி ஓடும் போது ரன் அவுட் ஆனார்.

நடுவரின் தவறு
ஆனால் மூன்றாம் நடுவரின் ரீப்ளேவில், பந்து ஸ்டம்பில் பட்ட போது பைல்ஸ் நகரவில்லை, ஆனால், அது பிறகு வங்கதேச வீரர் கை பட்ட பிறகு தான் ஸ்டம்ப் மற்றும் பைல்ஸ் நகர்ந்தது. இது விதிப்படி அவுட் கிடையாது. பந்து, அவருடைய கையில் இருந்திருந்தால் மட்டுமே அது அவுட் ஆகி இருக்கும். ஆனால், மூன்றாம் நடுவர், வங்கதேசத்திற்கு சாதகமாக அவுட் என அறிவித்தார். ஆனால், இது குறித்து வங்கதேசம் வாய் திறக்கவில்லை.


Click it and Unblock the Notifications
