Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“ஆஸ்திரேலியாவை வீழ்த்தினாலும்..”.. அன்று தோனி செய்த அதே விஷயத்தை செய்த வங்கதேச வீரர்கள்

டார்வின்: டார்வினில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்ற வங்கதேச வீரர்கள், அதை ஆரவாரமின்றி மிகவும் நிதானமாகக் கொண்டாடிய விதம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்தச் செயல், கடந்த 2008 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த முத்தரப்பு ஒருநாள் தொடரின் போது அன்றைய இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி எடுத்த முடிவை அப்படியே நினைவு படுத்துவதாக அமைந்தது.

அப்போது ரிக்கி பாண்டிங் தலைமையிலான பலமான ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திய பிறகு, இந்திய வீரர்கள் யாரும் மைதானத்தில் துள்ளிக் குதித்து கொண்டாடக் கூடாது என்று தோனி அறிவுறுத்தியிருந்தார். ஆஸ்திரேலியாவை வீழ்த்துவது என்பது எங்களுக்கு ஏதோ தற்செயலாகக் கிடைத்த அதிர்ஷ்டமல்ல, அது இந்திய அணி வழக்கமாகச் செய்யக்கூடிய ஒன்றுதான் என்பதை ஆஸ்திரேலிய அணிக்கு உணர்த்தவே தோனி அப்படிச் செய்தார். அதேபோன்ற ஒரு அணுகுமுறையைத்தான் தற்போது வரலாற்று வெற்றி பெற்ற வங்கதேச வீரர்களும் கையாண்டுள்ளனர்.

Bangladesh followed Dhoni like Low-Key celebration after Darwin Test Victory against Australia

இந்த நூற்றாண்டில் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்ற ஒரே ஆசிய அணி இந்தியாதான். இலங்கை, பாகிஸ்தான் போன்ற ஆசிய அணிகள் கூட ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு டெஸ்ட் வெற்றியை கூட பெற முடியாமல் தவித்து வருகின்றன. இந்த கடினமான சூழலில், முதன்முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் தனது முதல் டெஸ்ட் வெற்றியைப் பதிவு செய்த வங்கதேச வீரர்கள் உணர்ச்சிவசப்படாமல் மிகுந்த நிதானத்தை கடைப்பிடித்தனர்.

இதன் மூலம், ஆஸ்திரேலியாவை வீழ்த்துவது தங்களுக்கு சாதாரணமான ஒன்றுதான் என்றும், இனிவரும் காலங்களில் இதுபோன்ற இன்னும் பல வெற்றிகளைப் பெறப்போகிறோம் என்றும் அவர்கள் உலகிற்கு சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியிலும் வங்கதேச அணி இதேபோன்று வெற்றி பெற்றால், அது உலக கிரிக்கெட் அரங்கில் வங்கதேச அணியின் புதிய சகாப்தத்தின் தொடக்கமாக மாறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Story first published: Sunday, August 16, 2026, 13:20 [IST]
Other articles published on Aug 16, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+