சகிப் அல் ஹசன், மஹ்முதுல்லா அசத்தல்.. நியூசிலாந்தை வீழ்த்தியது வங்கதேசம்
கார்டிப்: சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் 9-வது ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது வங்காளதேசம் அணிகள் விளையாடின. பரபரப்பன ஆட்டத்தில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணி அபார வெற்றி பெற்றது.
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. கார்டிப் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் வங்கதேசம் - நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 265 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக ராஸ் டெய்லர் 63 ரன்கள் எடுத்தார். கேப்டன் வில்லியம்சன் 57 ரன்கள் அடித்தார். வங்காளதேசம் தரப்பில் மொசாடெக் உசைன் 3 விக்கெட்டுகளும், டஸ்கின் அகமது 2 விக்கெட்டும் எடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து 266 ரன்கள் வெற்றி இலக்கை விரட்டி களமிறங்கிய வங்காளதேச அணிக்கு ஆரம்பமே தடுமாறியது. ஓபனிங் பேட்ஸ்மேன்கள் தமிம் இக்பால் ரன் எதுவும் எடுக்காமலும், சவுமியா சர்க்கார் 3 ரன்களிலும் சவுத்தி ஓவரில் எல்.பி.டபுள்யூ. ஆகி வெளியேறினர். அடுத்து வந்த அல் அசன், மஹ்முதுல்லா ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை குவித்தனர். 114 பந்துகளை சந்தித்த அல் ஹசன் 114 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இறுதியில் மஹ்முதுல்லா ஆட்டமிழக்காமல் 102 ரன்களை குவித்தார்.
இறுதியாக 47.2 ஓவர்களில் 5 விக்கெட்களை மட்டும் இழந்து, வங்கதேச அணி வெற்றி பெற்றது. அல் ஹசன் ஆட்ட நாயகன் விருதை பெற்றார். சாம்பியன்ஸ் தொடரில் முதல் முறையாக நியூசிலாந்தை வென்று வங்கதேசம் சாதனை படைத்துள்ளது.


Click it and Unblock the Notifications