Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இது தேவையா? டாஸ் வென்று பேட்டிங் எடுத்து.. அசிங்கப்பட்ட வங்கதேச பேட்ஸ்மேன்கள்!

Recommended Video

India vs Bangladesh 2nd test day 1 1st innings | Bangladesh all out for 106 runs

கொல்கத்தா : இந்தியாவிலேயே முதல் முறையாக 3, 4 மற்றும் 5வது விக்கெட்டுகளை தொடர்ந்து டக் அவுட்டாக பறிகொடுத்து அணி என்ற சாதனையை வங்கதேச அணி புரிந்துள்ளது. இது அந்நாட்டு ரசிகர்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.

கொல்கத்தாவில் இன்று துவங்கியுள்ள முதல் பகலிரவு போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. இதில் 106 ரன்களுக்கு அந்த அணி தனது முதல் இன்னிங்சை நிறைவு செய்தது.

இந்தியாவிலேயே முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் 3 விக்கெட்டுகளை டக் அவுட்டுக்கு அடுத்தடுத்து பறிகொடுத்த அணி என்ற வேண்டாத சாதனையை வங்கதேசம் புரிந்துள்ளது. அணியின் கேப்டன் உள்பட அடுத்தடுத்து மூவர் டக்-அவுட்டாகினர்.

 106க்கு அனைத்து விக்கெட்டுகள் அவுட்

106க்கு அனைத்து விக்கெட்டுகள் அவுட்

கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் இந்தியாவின் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன. பல்வேறு சிறப்புகளை பெற்ற இந்த போட்டி, முதல்முறையாக எஸ்.ஜி. பிங்க் பந்துகளில் விளையாடப்படுகிறது.

 3, 4, 5 விக்கெட்டுகள் டக்-அவுட்

3, 4, 5 விக்கெட்டுகள் டக்-அவுட்

இந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த வங்கதேச அணி, 106 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து முதல் இன்னிங்சை நிறைவு செய்தது. இதில் 3, 4, 5வது விக்கெட்டுகளில் அடுத்தடுத்து டக்-அவுட்டாகியும் வங்கதேச அணி வேண்டாத சாதனையை புரிந்துள்ளது. இந்தியாவில் இது முதல் முறை. உலகளவில் 5வது முறை.

கேப்டனும் டக் - அவுட்

கேப்டனும் டக் - அவுட்

இந்த போட்டியில் போதுமான பயிற்சி கிடைக்கவில்லை என்று ஏற்கனவே வங்கதேச அணியின் கேப்டன் மோமிநுல் ஹக்கும் புலம்பித் தள்ளிய நிலையில் அவர் மற்றும் முகமது மிதுன், முஷ்பிகர் ரஹிம் ஆகியோர் டக்-அவுட் ஆனார்கள்.

 லிட்டன் தாசின் ஹெல்மட்டில் பட்டு தெறித்த பந்து

லிட்டன் தாசின் ஹெல்மட்டில் பட்டு தெறித்த பந்து

முகமது ஷமி, உமேஷ் யாதவ் மற்றும் இஷாந்த் ஷர்மா ஆகிய இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் இந்திய கிரிக்கெட்டின் மைல்கல்லாக பார்க்கப்படும் இந்தப் போட்டியில் தங்களது வெறித்தனத்தை காட்டினர். ஷமி போட்ட பந்து, வங்கதேச துவக்க ஆட்டக்காரர் லிட்டன் தாசின் ஹெல்மட்டில் பட்டு தெறித்தது.

Story first published: Friday, November 22, 2019, 19:06 [IST]
Other articles published on Nov 22, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+