Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வங்கதேச அணியின் 'சீக்ரெட் ஆப் சக்சஸ்' என்ன?: சொல்கிறார் பயிற்சியாளர் ஹதுருசிங்கா

ஹாமில்டன்: தோல்வியை கண்டு பயப்படாதது தான் உலகக் கோப்பையில் தங்கள் அணி காலிறுதிக்கு முன்னேறக் காரணம் என்று வங்கதேச அணியின் பயிற்சியாளர் சந்திகா ஹதுருசிங்கா தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பை போட்டிகளில் வங்கதேச அணி தான் விளையாடிய 5 போட்டிகளில் 3ல் வெற்றி பெற்றுள்ளது. வங்கதேச அணிக்கு முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் சந்திகா ஹதுருசிங்கா பயிற்சியாளராக உள்ளார்.

தனது அணி பற்றி அவர் கூறுகையில்,

இங்கிலாந்து

இங்கிலாந்து

திங்கட்கிழமை அடிலெய்ட் நகரில் நடந்த போட்டியில் இங்கிலாந்தை 15 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது வங்கதேச அணிக்கு நல்லதாகிவிட்டது.

தோல்வி பயம்

தோல்வி பயம்

எங்களுக்கு தோல்வி பயம் கிடையாது. அது தான் எங்கள் அணி காலிறுதிக்கு தகுதி பெற காரணம்.

நம்புங்கள்

நம்புங்கள்

தோல்வி அடைந்துவிடுவோமோ என்ற பயம் இல்லாததால் தான் எங்கள் அணி சுதந்திரமாக விளையாடுகிறது. அந்த குணம் தான் இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டிகளில் வெற்றி பெற காரணம் என்பதை நம்புங்கள்.

பெரிய விஷயம்

பெரிய விஷயம்

காலிறுதிக்கு தகுதி பெறுவதே பெரிய விஷயம் தான். இலங்கை, இங்கிலாந்து அணிகளை தாண்டி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது பெரிய விஷயம்.

நியூசிலாந்து

நியூசிலாந்து

நியூசிலாந்துக்கு எதிரான போட்டி கடினமாக இருக்கும். அவர்களின் பலங்கள் எங்களுக்கு தெரியும். அந்த அணியின் முக்கிய வீரரான பிரென்டன் மெக்கல்லத்தின் விக்கெட்டை துவக்கத்திலேயே எடுக்க முயற்சிப்போம். மெக்கல்லமும் பயமின்றி விளையாடுவதால் அவரது விக்கெட்டை எடுப்பது கடினம். இருப்பினும் எங்களின் திட்டத்தை செயல்படுத்தினால் வெற்றி பெற முடியும்.

திட்டம்

திட்டம்

நாங்கள் எப்பொழுதும் ஒரே மாதிரி விளையாட மாட்டோம். வெவ்வேறு அணிகளுக்கு எதிராக ஒரே திட்டத்தை பயன்படுத்த மாட்டோம் என்றார் ஹதுருசிங்கா.

Story first published: Thursday, March 12, 2015, 11:33 [IST]
Other articles published on Mar 12, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+