Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதெல்லாம் ரொம்ப 'ஓவரு'.. அலாவுதீன் பாபு!

Bangladesh pacer Alauddin Babu concedes record 39 runs in an over
டெல்லி: அலாவுதீன் பாபு... இந்த நிமிடத்தில் உலகிலேயே மிகவும் வருத்தமான வாலிபர் யார் என்றால் அது இவராகத்தான் இருக்க முடியும். காரணம், பாபு செய்த வேலை அப்படி.

டாக்காவில் நடந்த கிரிக்கெட் போட்டி ஒன்றில் ஒரே ஓவரில் 39 ரன்களைக் கொடுத்து பெரும் டென்ஷனாக காணப்படுகிறார் இந்த பந்து வீச்சாளர்.

ஷேக் ஜமால் தான்மோன்டி என்ற கிளப்புக்கு எதிரான போட்டியின்போதுதான் இந்த புதிய உலக சாதனையை அவர் படைத்தார்.

ஷேக் அணியி்ன் சார்பில் ஆடிய ஜிம்பாப்வே முன்னாள் கேப்டன் எல்டன் சிகும்பராதான், அலாவுதீனை நொந்து போக வைத்தவர். அலாவுதீன் வீசிய அந்த ஓவரில் மட்டும் 39 ரன்களை வெளுத்தார் சிகும்பரா.

முதல் பந்திலேயே ஒரு பவுண்டரியை அடித்தார் சிகும்பரா. பந்து நோல் பால் ஆனதால் முதல் பந்திலேயே ஐந்து ரன்கள் கிடைத்தன. அடுத்து ஒரு வைடு போட்டார் அலாவுதீன். பின்னர் அடுத்த நான்கு பந்துகளில் 6, 4, 6, 4, 6 என்று மாறி மாறி நையப்புடைத்தார் சிகும்பரா.

பிறகு இன்னொரு வைடு போட்டார் அலாவுதீன். கடைசிப் பந்தில் சிக்ஸ் அடிக்க அலாவுதீன் வெக்ஸ் ஆகி விட்டார்.

மொத்தம் இந்த ஒரு ஓவரில் 39 ரன்களைக் குவித்து விட்டது ஷேக் அணி. உலக அளவில் லிஸ்ட் ஏ கிரிக்கெட் வரலாற்றில் ஒரே ஓவரில் இத்தனை ரன்களை ஒரு பந்து வீச்சாளர் விட்டுக் கொடுத்தது இதுவே முதல் முறையாகும் என்பதால் இது உலக சாதனையாக மாறி விட்டது.

Story first published: Thursday, October 3, 2013, 15:21 [IST]
Other articles published on Oct 3, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+