Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தம்பி! தேதி முடிஞ்சு போச்சு.. எங்கேயும் போக முடியாது! வசமாக சிக்கிக் கொண்ட வங்கதேச வீரர்!

கொல்கத்தா : இந்தியா - வங்கதேசம் டெஸ்ட் தொடர் முடிவடைந்து மற்ற வீரர்கள் நாடு திரும்பிய நிலையில், ஒரு வங்கதேச வீரர் மட்டும் நாடு திரும்ப முடியாமல் விமான நிலையத்தில் சிக்கிக் கொண்டார்.

சயிப் ஹாசன் என்ற அந்த வீரர் மாற்று துவக்க வீரராக வங்கதேச டெஸ்ட் அணியில் இடம் பெற்று இருந்தார்.

அவரது விசா காலம் முடிவடைந்த விஷயம் அவருக்கும், வங்கதேச கிரிக்கெட் அமைப்பின் அதிகாரிகளுக்கும் தெரியாததால் இந்த குளறுபடிகள் நடந்தேறின.

வங்கதேச டெஸ்ட் தொடர்

வங்கதேச டெஸ்ட் தொடர்

இந்தியா - வங்கதேசம் மோதிய மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து கடந்த வாரம் ஞாயிறு அன்று முடிந்தது.

கடைசி டெஸ்ட் போட்டி

கடைசி டெஸ்ட் போட்டி

கொல்கத்தாவில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி போட்டியின் மூன்றாம் நாள் (ஞாயிறு) அன்றே முடிந்தது. அந்தப் போட்டியில் வங்கதேசம் இன்னிங்க்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து இருந்தது.

இரு பிரிவுகள்

இரு பிரிவுகள்

அந்தப் போட்டி முடிந்த சில மணி நேரங்களில் வங்கதேச வீரர்களின் ஒரு பகுதியினர் கொல்கத்தாவில் இருந்து விமானம் மூலம் வங்கதேசத்திற்கு புறப்பட்டு சென்றனர். அடுத்த பிரிவு வீரர்கள் திங்கள் அன்று காலை விமானம் மூலம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

சிக்கினார் சயிப்

சிக்கினார் சயிப்

அந்த இரண்டாவது பகுதி வீரர்கள் வரிசையில் சயிப் ஹாசனும் இருந்தார். அந்த வீரர்கள் அனைவரும் விமான நிலையம் சென்ற போது சயிப் ஹாசன் விசா முடிந்ததால் அதிகாரிகளிடம் சிக்கினார்.

போர்டிங் பாஸ் சிக்கல்

போர்டிங் பாஸ் சிக்கல்

அவருடைய விசா முடிவடைந்ததை பயணத்திற்கு வேண்டிய போர்டிங் பாஸ் வழங்கும் போது கண்டுபிடித்த அதிகாரிகள், அவருக்கு போர்டிங் பாஸ் வழங்கவில்லை. அவர் விமான நிலையத்திலேயே சிக்கிக் கொண்டார்.

விசா காலம் முடிவு

விசா காலம் முடிவு

சயிப்பின் விசா காலம் ஞாயிறு இரவு முடிவுக்கு வருகிறது. அதை முன்பே பயணத்தை ஏற்பாடு செய்த வங்கதேச கிரிக்கெட் அமைப்பு அதிகாரிகள் கண்டுபிடித்து இருந்தால் அவரை ஞாயிறு அன்று கிளம்பிய முதல் பகுதி வீரர்களோடு அனுப்பி வைத்திருக்கலாம் அல்லது சில நாட்கள் முன்பே விசா நீட்டிப்பு கேட்டு விண்ணப்பித்து இருக்கலாம்.

முக்கிய காரணம்

முக்கிய காரணம்

சயிப் கடந்த ஜூன் மாதம் இந்தியாவுக்கான சுற்றுலா பயணி விசாவை பெற்றுள்ளார். இது ஆறு மாதம் வரை மட்டுமே செல்லும். ஆனால், சயிப் ஹாசனும், கிரிக்கெட் அமைப்பு அதிகாரிகளும் விசா தேதி முடிவடையும் காலத்தை தெரிந்து கொள்ளாமல் இருந்தது தான் இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணம்.

3 நாட்கள் ஆனது

3 நாட்கள் ஆனது

விமான நிலைய அதிகாரிகளிடம் சிக்கிய சயிப் மூன்று நாட்களாக விமான நிலையத்திலேயே இருந்தார். அவருக்காக வங்கதேசத்தில் இருக்கும் இந்திய ஹைகமிஷன் அலுவலகம் விரைந்து செயல்பட்டு கடந்த புதன்கிழமை விசா நீட்டிப்பு அளித்தது.

அபராதம் விதிப்பு

அபராதம் விதிப்பு

இப்போது மற்றொரு பாதிப்பாக விசா முடிவடைந்த பின் இந்தியாவில் இருந்த சயிப் ஹாசன் அபராதம் கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் தான் இந்த விதி இந்தியாவில் அமல்படுத்தப்பட்டது.

அபராதத்தொகை

அபராதத்தொகை

அதன்படி, ரூ.21,600 செலுத்திய பின்னரே சயிப் ஹாசன் இந்தியாவை வெளியேற முடியும். சயிப் ஹாசன் ஒரு போட்டியில் கூட களமிறங்கும் வாய்ப்பு பெறாத நிலையில், இந்த விசா சிக்கலால் மேலும் நொந்து போய் இருக்கிறார்.

Story first published: Friday, November 29, 2019, 9:25 [IST]
Other articles published on Nov 29, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+