Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கிரிக்கெட் வரலாற்றில் புதிய உலக சாதனை படைத்த வங்கதேச வீரர்… !! யாராவது இதை கவனிச்சீங்களா..?

Recommended Video

அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த வங்கதேச கூட்டணி

லண்டன்: வங்கதேச அணி வீரர் ஷாகிப் அல் ஹசன் ஒருநாள் போட்டிகளில் புதிய உலக சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்.

உலககோப்பை கிரிக்கெட் தொடர் தற்பொழுது இங்கிலாந்தில் மிக பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்ற 5 போட்டிகளில், இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, வங்கதேசம் ஆகிய அணிகள் வெற்றி கணக்கை தொடங்கியிருக்கின்றன.

தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகள் தங்களின் முதல் போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. இந் நிலையில், வங்கதேச வீரர்கள் ஷாகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹீம் இருவரும் உலக கோப்பை தொடரில் தோனி மற்றும் கோலி சாதனையை முறியடித்துள்ளனர்.

5வது ஆட்டம்

5வது ஆட்டம்

லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்ற 5வது போட்டியில் தென் ஆப்ரிக்கா மற்றும் வங்கதேச அணிகள் மோதின. டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி முதலில் விளையாடிய வங்கதேச அணியில் தொடக்க வீரர்கள் தமீம் இக்பால் மற்றும் சவுமியா சர்கார் இருவரும் களம் இறங்கினர்.

சிறப்பான இணை

சிறப்பான இணை

தமீம் இக்பால் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே 16 ரன்னில் அவுட் ஆக அடுத்து களம் இறங்கிய ஷாகிப் அல் ஹசன் நிலைத்து விளையாடினார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய சவுமியா சர்கார் 42 ரன்னில் அவுட் ஆக அதன் பின்னர் ஜோடி சேர்ந்த ஷாகிப் மற்றும் முஷ்பிகுர் ரஹீம் இருவரும் சிறப்பாக விளையாடினர்.

உலக சாதனை

உலக சாதனை

இந்த ஆட்டத்தில் வங்கதேசம் அணியின் முக்கிய வீரர் ஷாகிப் அல் ஹசன் பேட்டிங்கில் 75 ரன்களும், ஒருவிக்கெட்டையும் வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்றார். அதோடு மட்டுல்லாமல் புதிய உலகசாதனையையும் நிகழ்த்தி உள்ளார்.

250 விக்கெட்டுகள்

250 விக்கெட்டுகள்

ஒருநாள் போட்டிகளில் குறைந்த ஆட்டங்களில் ஆடி 250 விக்கெட்டுகளையும், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரன்களை குவித்த வீரர்களில் ஷாகிப் அல் ஹசன் புதிய உலக சாதனை படைத்துள்ளார். அதாவது 199 போட்டிகளில் அவர் 250 விக்கெட்டுளையும், 5 ஆயிரத்து 792 ரன்களும் சேர்த்து குறைந்த ஆட்டங்களில் 250 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் உலக சாதனையை படைத்தார்.

குறைவான போட்டிகள்

குறைவான போட்டிகள்

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் மார்க்ரம் விக்கெட்டை ஷாகிப் அல் ஹசன் வீழ்த்தியபோது இந்த சாதனையை அவர் நிகழ்த்தினார். விரைவாக 250 விக்கெட்டுகளை 199 போட்டிகளில் ஷாகிப் அல் ஹசன் மட்டுமே எட்டி சாதனை படைத்துள்ளார்.

மற்றவர்கள் யார்?

மற்றவர்கள் யார்?

அதற்கு அடுத்த இடத்தில் ரசாக் 258 போட்டிகளிலும், அப்ரிடி 273 போட்டிகளிலும் இந்த விக்கெட்டுகளை எடுத்துள்ளனர். காலிஸ் 296 போட்டிகளிலும், ஜெயசூர்யா 304 போட்டி களிலும் 250 விக்கெட்டுகளை எட்டினர்.

Story first published: Monday, June 3, 2019, 18:04 [IST]
Other articles published on Jun 3, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+