For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

முதல் 2 பந்தில் 2 விக்கெட்.. திருப்பி அடித்த நெதர்லாந்து.. கடைசியில் டிவிஸ்ட் .. வங்கதேசம் வெற்றி

ஹாபர்ட் : டி20 உலககோப்பை கிரிக்கெட்டின் 2வது சுற்றில் வங்கதேசம் அணி முதல் முறையாக வெற்றியை பதிவு செய்து இருக்கிறது.

ஹாபர்ட் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்துவீசியது.

இதனையடுத்து வங்கதேச அணியின் தொடக்க வீரர் நூருல் மற்றும் சௌமியா சர்கார் ஆகியோர் நிதானமாக விளையாட முயன்றனர்.

தடுமாறிய வங்கதேசம்

தடுமாறிய வங்கதேசம்

நூருல் 20 பந்துகளை எதிர்கொண்ட 25 ரன்கள் சேர்த்த நிலையில், சௌமியா சர்கார் 14 ரன்களில் வெளியேறினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லிடான் தாஸ் 9 ரன்களும், கேப்டன் ஷகிபுல் ஹசன் 7 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேற, யாசிர் அலி 3 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

போராடிய ஆபிஃப் ஹூசைன்

போராடிய ஆபிஃப் ஹூசைன்

இதன் மூலம் வங்கதேசம் அணி 76 ரன்கள் சேர்ப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும் ஆபிஃப் ஹூசைன் அதிரடியாக விளையாடி 2 சிக்சர், 2 பவுண்டரிகள் அடித்து 38 ரன்கள் சேர்த்தார். இறுதியில் மொசதேக் ஹூசைன் 20 ரன்கள் எடுக்க, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்தது வங்கதேசம் அணி.

15 ரன்களுக்கு 4 விக்கெட்

15 ரன்களுக்கு 4 விக்கெட்

145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணிக்கு ஆரம்பமே டபுள் அதிர்ச்சியாக அமைந்தது. தக்சின் அகமது வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரின் முதல் 2 பந்திலேயே 2 விக்கெட்டுகளை டஸ்கின் அகமது கைப்பற்றினார்.தொடக்க வீரர் மேக்ஸ் 8 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதே போன்று டாம் கூப்பர் டக் அவுட்டாக 15 ரன்கள் சேர்ப்பதற்குள் நெதர்லாந்து 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

வங்கதேசம் முதல் வெற்றி

வங்கதேசம் முதல் வெற்றி

ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், காலின் ஆக்கர்மேன் தனி ஆளாக நின்று கடுமையாக போராடி வங்கதேசத்துக்கு நெருக்கடி அளித்தார். ஆக்கர்மேன் 48 பந்துகளில் 62 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 24 ரன்கள் தேவைப்பட்ட போது, நெதர்லாந்து அணி சிக்சர் விளாசியதால் பரபரப்பு தொற்றி கொண்டது. எனினும் வங்கதேசம் பதறாமல் கடைசி விக்கெட்டை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Story first published: Monday, October 24, 2022, 14:11 [IST]
Other articles published on Oct 24, 2022
English summary
Bangladesh Registered First ever win in t20 world cup 2nd round முதல் 2 பந்தில் 2 விகிகெட்.. திருப்பி அடித்த நெதர்லாந்து.. கடைசியில் டிவிஸ்ட் .. வங்கதேசம் வெற்றி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+