For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

10 வருட உழைப்பு.. உலக அரங்கில் "கெத்து".. வங்கதேச அணி அசுர "பாய்ச்சல்"

மும்பை: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் பவுலிங் தரவரிசையில், வங்கதேச வீரர்கள் இருவர் இடம்பிடித்து அசத்தியுள்ளனர். இந்தியாவுக்கே ஒரு பவுலர் தான் லிஸ்டில் இருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

Recommended Video

ICC ODI Ranking: 2 Bangladesh Bowlers இடம்பிடித்து அசத்தல் | Mehidy Hasan | Mustafizur Rahman

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்ஒருநாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டது. இதில், வங்கதேச சுழற் பந்துவீச்சாளர் மெஹதி ஹசன் 2-வது இடத்துக்கு முன்னேறி புதிய சாதனை படைத்துள்ளார். அதேபோல், மற்றொரு வங்கதேச பவுலர் முஸ்தாபிசுர் ரஹ்மான் ஒன்பதாவது இடம் பிடித்துள்ளார்.

இதன் மூலம், பவுலர்களின் தரவரிசையில் முதல் இரு இடங்களில் இடம் பிடித்த 3-வது வங்காளதேச வீரர் எனும் பெருமையை மெஹதி ஹசன் பெறுகிறார். இதற்கு முன் ஷகிப் அல் ஹசன் 2009ம் ஆண்டில் முதலிடத்திலும், 2010ம் ஆண்டும் அப்துர் ரஹிம் 2-வது இடத்தையும் பிடித்திருந்தனர்.

 முதலிடம்

முதலிடம்

இலங்கைக்கு எதிராக தாகாவில் நடந்து வரும் ஒருநாள் தொடரில் இரு போட்டிகளிலும் சேர்த்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தியதைத் தொடர்ந்து, மெஹதி ஹசன் 3 இடங்கள் முன்னேறி 725 புள்ளிகளுடன் 2 வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். நியூஸிலாந்து வீரர் டிரன்ட் போல்ட் 737 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

 வியத்தகு வெற்றிகள்

வியத்தகு வெற்றிகள்

கடந்த 10 ஆண்டுகளில் வங்கதேச அணியின் பிராசஸ் என்பது வியக்கத்தக்க வகையில் அமைந்துள்ளது. 2010க்கு முன்பு கத்துக்குட்டி அணிகளில் ஒன்றாக வலம் வந்த டீம் அது. பெரிய தொடர்களில், பெரிய அணிகள் ஜெயிப்பதற்கு ஏதுவாக இருந்த அணி. ஆனால், ஷகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹீம், தமீம் இக்பால், மஹ்மதுல்லா, சவுமியா சர்கார், சபீர் அஹ்மது, முஸ்தாபிசுர் ரஹ்மான் என்று உலகத் தரம் வாய்ந்த வீரர்கள் காரணமாக உள்ளூர் புலியாக மாறியது வங்கதேசம்.

 ஒயிட் வாஷ்

ஒயிட் வாஷ்

தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, இந்தியா, இலங்கை என்று உலகின் டாப் அணிகளை தங்கள் மண்ணில் வைத்து வீழ்த்தி ரசிகர்கள் மனதை குளிரச் செய்தது. தோனி தலைமையிலான அணி, வங்கதேசம் சென்று ஒருநாள் தொடரில் தோற்றது எல்லாம் இந்திய ரசிகர்கள் இதயத்தில் இரத்தம் வழிந்த சம்பவமாகும். அதிலும், நியூசிலாந்தை 4-0 என்று ஒயிட் வாஷ் செய்ததெல்லாம் வேற ரகம்.

 நாகினி டான்ஸ்

நாகினி டான்ஸ்

குறிப்பாக, 2014க்கு பிறகு அந்த அணியின் விளையாட்டு என்பது, உள்ளூரைத் தாண்டி பிரகாசித்தது, அச்சுறுத்தியது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடைபெற்ற 2015 உலகக் கோப்பைத் தொடரில், காலிறுதி வரை முன்னேறியது வங்கதேசம். அதேபோல், 2016ல் இந்தியாவில் நடந்த டி20 உலகக் கோப்பை தொடரில், இந்தியாவிடம் கடைசி பந்தில் தோற்றது. 2018ல் இலங்கையில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரிலும், இந்தியாவிடம் கடைசி பந்தில் வங்கதேசம் தோற்றது. தினேஷ் கார்த்திக் மட்டும் கடைசி பந்தில் சிக்ஸ் அடிக்காதிருந்தால், 'நாகினி' டான்ஸ் போட்டே, நாக்குத் தள்ள வைத்திருக்கும் வங்கதேசம்.

 ஒருபடி கூடுதலாக

ஒருபடி கூடுதலாக

இப்படி படிப்படியாக தங்கள் திறமையை, ஆட்ட நுணுக்கங்களை ஒவ்வொரு வருடமும் உயர்த்தி வந்த வங்கதேசம், இன்று பவுலிங் தரவரிசையில், தனது இரண்டு பவுலர்களை இடம் பெறச் செய்திருக்கிறது. இந்திய அணியில் இருந்து பும்ரா மட்டுமே இடம் பிடித்த நிலையில், இந்தியாவை விட ஒருபடி கூடுதலாக பாய்ந்திருக்கிறது வங்கதேசம்.

Story first published: Wednesday, May 26, 2021, 21:16 [IST]
Other articles published on May 26, 2021
English summary
Bangladesh Mehidy Hasan ICC ODI Rankings - மெஹிதி ஹசன்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+