For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நடுவரை அடிக்க சென்ற ஷகிபுல் ஹசன்.. ஓயிடு பால் தராததால் ஆத்திரம்.. BPL தொடரில் பரபரப்பு - வீடியோ

டாக்கா : வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷகிபுல் ஹசன் களத்தில் கோபமாக நடந்து கொள்வது, இது முதல் முறையும் அல்ல. இத்துடன் முடிய போவதும் அல்ல.

களத்தில் நடுவருடன் மோதுவதை ஒரு பொழுது போக்கு பழக்கமாக செய்து வருகிறார் ஷகிபுல் ஹசன். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கூட வங்கதேச கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் பிபிஎல் குறித்து குற்றஞ்சாட்டினார்.

தம்மை பிபிஎல் தொடரின் தலைவராக நியமித்தால், நாயக் (முதல்வன்)படத்தில் வருவது போல் அனைத்தையும் ஒரே நாளில் மாற்றி விடுவேன் என்றும் கூறி இருந்தார்.

 ஷகிபுல் ஹசன் அதிரடி

ஷகிபுல் ஹசன் அதிரடி

இந்த நிலையில், டாக்காவில் நடைபெற்ற 4வது லீக் ஆட்டத்தில் பாரிஷல் அணிக்காக களமிறங்கிய ஷகிபுல் ஹசன், சில்ஹெட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணியுடன் பலப்பரிட்சை நடத்தினார். இதில் முதலில் பேட் செய்த பாரிஷல் அணி 20 ஓவர் முடிவில் 194 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது. இதில் ஷகிபுல் ஹசன் 32 பந்துகளில் 67 ரன்கள் விளாசினார்.

 நடுவரின் தவறு

நடுவரின் தவறு

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய சில்ஹெட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 19 ஓவர் முடிவிலேயே வெற்றி இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஷகிபுல் ஹசன் பேட்டிங் செய்யும் போதே இதே சர்ச்சை ஏற்பட்டது. ஆட்டத்தின் 15.4 வது ஓவரில் ரிஜூர் வீசிய பந்து ஷகிபுல் ஹசன் தலைக்கு மேல் சென்றது. இதற்கு நியாயப்படி ஓயிடு வழங்கி இருக்க வேண்டும்.

 சண்டை

சண்டை

ஆனால், நடுவர் இதனை ஒரு ஓவருக்கு ஒரு ஷாட் பால் என்ற கணக்கில் சேர்த்து விட்டார். இதனால் கடுப்பான ஷகிபுல் ஹசன், நடுவரை பார்த்து ஏய், ஏய் என்று கத்தினார். பிறகு நடுவரிடம் அடிப்பது போல் நடந்து சென்று எதற்கு ஓயிடு பால் தரவில்லை என்று சண்டையிட்டார். அதற்கு நடுவரும், சக வீரரும் ஷகிபுல் ஹசனை சமாளித்து அனுப்பி வைத்தனர்.

முதல் முறை அல்ல

ஷகிபுல் ஹசன் கோபப்படுவது இது ஒன்றும் புதிது அல்ல. கடந்த சீசனில் தவறான முடிவு வழங்கிய நடுவரிடம் சண்டை போட்டு பிறகு ஸ்டம்பை உதைத்து ஷகிபுல் ஹசன் அராஜகத்தில் ஈடுபட்டார். பிறகு தன்னுடைய செயலுக்கு ஷகிபுல் ஹசன் மன்னிப்பு கேட்டார். வங்கதேச கிரிக்கெட்டில் முறைகேடு நடப்பதால் தான் அவர் இப்படி தட்டி கேட்பதாக ஷகிபுல் ஹசன் ரசிகர்கள் அப்போது விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, January 8, 2023, 15:48 [IST]
Other articles published on Jan 8, 2023
English summary
Bangladesh star Batsman Shakib al hasan angry with umpire decision in BPL நடுவரை அடிக்க சென்ற ஷகிபுல் ஹசன்.. ஓயிடு பால் தராததால் ஆத்திரம்.. BPL தொடரில் பரபரப்பு - வீடியோ
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+