242 ரன்களில் சுருண்டது வங்கதேசம்- இந்தியா 123 ரன்கள் லீடிங்

சிட்டகாங்கில் நடந்து வரும் முதல் டெஸ்ட் போட்டியில், நேற்று இந்தியாவை 243 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸை முடித்து வைத்தது வங்கதேசம். அந்த அணியின் பந்து வீச்சாளர்களான ஷஹாதத், ஷாகிப் ஆகியோர் தலா 5 விக்கெட்களை வீழ்த்தினர்.
இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தைத் தொடங்கியது வங்கதேசம். இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் ஜாகிர் கான் மற்றும் இஷாந்த் சர்மாவின் அபாரப் பந்து வீச்சால் சடசடவென 3 விக்கெட்களை இழந்தது வங்கதேசம்.
இந்தியாவை விட ஒரு ரன்கள் குறைவாக எடுத்திருந்த நிலையில் 242 ரன்களுக்கு ஆட்டமிழந்தது வங்கதேசம்.
இந்தியாவின் சார்பில் ஜாகிர்கான், மிஸ்ரா ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். இஷாந்த் சர்மா, ஸ்ரீசாந்த்துக்கு தலா 2 விக்கெட்கள் கிடைத்தன.
வங்கதேச அணியின் மகமதுல்லா நிதானமாக ஆடி 69 ரன்கள் சேர்த்தார். அந்த அணியில் தனி ஒரு வீரர் எடுத்த அதிகபட்ச ரன் இதுதான்.
பின்னர் இந்தியா தனது 2வது இன்னிங்ஸைத் தொடங்கியது. ஷேவாக்கும் கம்பீரும் ஆட்டத்தைத் தொடங்கினர்.
ஷேவாக் வழக்கம் போல வேகமாக ஆடி 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஆட்ட நேர இறுதியில் கம்பீர் 47 ரன்களுடனும், மிஸ்ரா 21 பந்துகளில் 24 ரன்களுடனும் ஆடிக் கொண்டிருந்தார். இந்தியா ஒரு விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்து வங்கதேசத்தை விட 123 ரன்கள் முன்னணி பெற்றிருந்தது.
90 நிமிடம் லேட்..
முன்னதாக பனி மூட்டம் காரணமாக இன்று காலை கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் தாமதமாக ஆட்டம் தொடங்கியது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:34 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications