Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வங்கதேசத்தை காப்பாற்றியது மழை.. டிராவை நோக்கி டெஸ்ட் போட்டி!

பதுல்லா: வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் டாசில் வென்று முதலில் பேட் செய்த இந்தியா 462 ரன்களில் டிக்ளேர் செய்தது. இதையடுத்து வங்கதேசம் பேட்டிங்கை தொடங்கிய நிலையில் 111 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், மழை பெய்ததால் ஆட்டம் பாதி நாள்தான் நடைபெற்றது. நாளை டெஸ்ட் போட்டியின் இறுதி நாள் என்பதால் போட்டி டிரா ஆவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.

வங்கதேசத்தில் சுற்றுப் பயணம் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளில் ஆடுகிறது. டெஸ்ட் போட்டி பதுல்லா நகரில் புதன்கிழமை தொடங்கியது. டாசில் வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி, பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.

Bangladesh Test: India declare first innings at 462/6

முதல் நாளில் விக்கெட்டை பறிகொடுக்காமல் 239 ரன்கள் எடுத்து ஆதிக்கம் செலுத்திய இந்தியா, 3வது நாளில் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்தது. முன்னதாக 2வது நாள் ஆட்டம் மழையால் முழுமையாக கைவிடப்பட்டது.

3ம் நாளான நேற்று மாலை டீ இடைவேளையின்போது, 462 ரன்களுக்கு இந்தியா 6 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் மழையால் ஆட்டம் தடை பட்டது. இதன்பிறகு மாலை வரை மழை தொடர்ந்ததால், 3வது நாள் ஆட்டம் முடித்துக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அஸ்வின் 2 ரன்கள், ஹர்பஜன் சிங் 7 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில், இன்று காலை இந்திய அணி மேற்கொண்டு பேட்டிங் செய்யாமல் நேற்றைய ஸ்கோருடன் டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து வங்கதேசம் பேட்டிங்கை தொடங்கியது. வங்கதேச அணியின் ஸ்கோர் 27 ரன்களாக இருந்தபோது, அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரம் தமிம் இக்பால், அஸ்வின் பந்தில் கீப்பர் விருதிமான் சாஹாவிடம் கேட்ச் கொடுத்து 19 ரன்னில் வெளியேறினார்.

இதையடுத்து இம்ருல் கயேஸுடன், மொமினுல் ஹாக் ஜோடி சேர்ந்தார். ஆனால், ஹர்பஜன் பந்தில் மொமினுல் ஹக், உமேஷ் யாதவிடம் கேட்ச் கொடுத்து 30 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் முஷ்பிகுர் ரஹிம், 2 ரன்களில் அஸ்வின் பந்தில் ரோகித் ஷர்மாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

30.1 ஓவர்களில் வங்கதேசம் 111 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், மழை வந்ததால் ஆட்டம் தடைபட்டது. மாலைவரை மழை பெய்ததால் 4வது நாள் ஆட்டம் கைவிடப்பட்டது.

351 ரன்கள் பின்தங்கியுள்ள வங்கதேசத்தின் அனைத்து விக்கெட்டுகளையும் விரைவிலேயே வீழ்த்தி, மீண்டும் அந்த அணியை பேட் செய்ய வைத்து அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்துவது ஒரே நாளில் சாத்தியப்படாது என்பதால், டெஸ்ட் போட்டியின் இறுதிநாளான நாளை, போட்டி டிரா ஆக அதிக வாய்ப்பு உள்ளது.

இந்திய அணி விவரம்: விராட் கோஹ்லி, முரளி விஜய், ஷிகர் தவான், அஜிங்ய ரஹானே, ரோகித் ஷர்மா, விருதிமான் சாஹா (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ஹர்பஜன் சிங், உமேஷ் யாதவ், வருண் ஆரோன், இஷாந்த் ஷர்மா.

வங்கதேச அணி விவரம்: முஷ்பிகுர் ரகிம் (கேப்டன்), தமிம் இக்பால், இம்ருல் கயேஸ், மொமினுல் ஹாக், ஷாகிப் அல் ஹசன், சவும்யா சர்கார், லிட்டோன் தாஸ் (விக்கெட் கீப்பர்), சுவகடா சோம், தைஜுல் இஸ்லாம், முகமது ஷாகித், ஜுபைர் ஹொசைன்.

Story first published: Saturday, June 13, 2015, 17:33 [IST]
Other articles published on Jun 13, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+