Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடப்பாவமே.. தவானுக்கு கட்டம் கட்டிய பிசிசிஐ.. வங்கதேச தொடர் தான் கடைசியாம்.. அடுத்த 1 வருடம் போச்சு!

மும்பை: வங்கதேச சுற்றுப்பயணம் தான் 2023ம் ஆண்டு உலகக்கோப்பைக்கான அணியில் தவான் விளையாடுவாரா? மாட்டாரா? என்பதை முடிவு செய்யவுள்ளது.

நியூசிலாந்து உடனான தொடரை தோல்வியுடன் முடித்த இந்திய அணி அடுத்ததாக வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு இரு அணிகளுக்கு இடையே ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்கள் நடக்கவுள்ளன.

இதில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் டிசம்பர் 4ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. சிறிய அணியுடனான போட்டி என்று ரசிகர்கள் நினைக்கும் வேளையில் இது மிக முக்கியமான தொடராக மாறியிருக்கிறது.

4 சீனியர்கள் கம்பேக்

4 சீனியர்கள் கம்பேக்

இந்திய அணியின் டாப் ஆர்டரில் நீண்ட நாட்களுக்கு பிறகு ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி, கே.எல்.ராகுல் ஆகியோர் இணைந்து விளையாடவுள்ளனர். இவர்கள் கடைசியாக 2021 மார்ச் மாதம் தான் சேர்ந்து ஆடியுள்ளனர். இந்த தொடரில் இவர்கள் 4 பேரும் இணைவதை பார்க்கலாம் என்பதால் பல வீரர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.

மிடில் ஆர்டர்

மிடில் ஆர்டர்

ரோகித் சர்மா - ஷிகர் தவான் ஜோடி அணியில் இருந்தால் அவர்கள் தான் ஓப்பனிங் ஆடுவார்கள். துணைக்கேப்டன் என்பதால் கே.எல்.ராகுல் இடம்பெற்றே தீருவார். அதுவும் மிடில் ஆர்டரில் தான். முதல் விக்கெட்டிற்கு விராட் கோலி களமிறங்கிவிடுவார். முதல் 4 இடங்கள் சென்றுவிடுவதால் 5வது இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா என பலரும் போட்டி போட்டு வருகின்றனர்.

6வது பவுலர் தேவையா?

6வது பவுலர் தேவையா?

இந்தியாவின் ப்ளேயிங் 11ல் 6வது பவுலர் வேண்டுமென்றால் நிச்சயம் ஸ்ரேயாஸ் ஐயர் தான் இடம்பெறுவார். சூர்யகுமார் யாதவ், பண்ட், ஹூடா ஆகியோர் ஏமாற்றத்தையே காண வேண்டும். ஆனால் அவர்கள் மூவருமே இந்தியாவின் எதிர்காலம் என்பதால் விடுவிக்கவும் பிசிசிஐ-க்கு மனமில்லை. இதற்கு உள்ள ஒரே தீர்வு தவான் கண்டிப்பாக தேவை தானா? என்ற கேள்வி தான்.

தவானுக்கு சிக்கல்

தவானுக்கு சிக்கல்

ஒருநாள் கிரிக்கெட்டில் நல்ல ஃபார்மில் இருக்கும் ஷிகர் தவான் ஒருவேளை வங்கதேச தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவிட்டால் நிச்சயம் உலகக்கோப்பைக்கான ரேஸில் அவர் இருப்பார். ஒருவேளை சொதப்பிவிட்டால், இனி வரும் போட்டிகளில் கே.எல்.ராகுலை ஓப்பனிங் களமிறக்கிவிட்டு, மற்ற இளம் வீரர்களை சேர்த்துவிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, December 1, 2022, 17:04 [IST]
Other articles published on Dec 1, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+