Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ICC World cup - இலங்கையை மிரள வைத்த வங்கதேசம்.. பயிற்சி ஆட்டத்தில் பட்டையை கிளப்பிய ஷகிபுல் ஹசன் படை

கவுகாத்தி : உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் பலம் வாய்ந்த இலங்கை அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசம் அணி வீழ்த்தி இருப்பது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பயிற்சி ஆட்டம் வெள்ளிக்கிழமை முதல் தொடங்கியது.

இதில் கவுஹாத்தியில் நடைபெற்ற முதல் பயிற்சி ஆட்டத்தில் இலங்கையும் வங்கதேசம் அணியும் பலபரிட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

Bangladesh trash srilanka by 7 wickets with 7 overs to spare in practice game

இதனை அடுத்து களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க வீரர் குஷல் பெரேரா 34 ரன்களில் ரிட்டையர்டு ஹர்ட் ஆனார். குசல் மெண்டிஸ் 22 ரன்களிலும் சமர விக்கிரமா இரண்டு ரன்களிலும் ஆட்டம் இழக்க தொடக்கவீரர் நிஷாங்கா மட்டும் பொறுமையாக விளையாடி 68 ரன்கள் சேர்த்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அசலங்கா 18 ரன்களில் வெளியேற தனஞ்செய் டி சில்வா மட்டும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்து பெவிலியின் திரும்பினார்.

கேப்டன் சனக்கா 3 ரன்களிலும், கருணரத்தனே 18 ரன்களிலும் வெளியேறினர். இதனால் இலங்கை அணி 49 புள்ளி ஒரு ஓவரில் 263 ரன்களை மட்டுமே எடுத்தது. வங்கதேச பந்துவீச்சில் மெஹதி ஹசன் மூன்று விக்கெட்டுகளை எடுத்தார். இதனை அடுத்து 264 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணியின் இளம் வீரர் தன்சித் ஹசன் அபாரமாக விளையாடி 84 ரன்கள் சேர்த்தார்.

இதே போன்று அனுபவ வீரர் லிட்டன் தாஸ் 6 ரன்களிலும் இன்றைய ஆட்டத்தில் கேப்டனாக களம் இறங்கிய மெஹதி ஹசன் 67 ரன்களும் எடுக்க இறுதியில் முஸ்பிகுர் ரஹீம் 43 பந்துகளில் 35 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் வங்கதேச அணி 42 ஓவர்கள் எல்லாம் இலங்கை நிர்ணயித்த இலக்கை மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து எட்டியது. இதிலும் வங்கதேச அணியில் ஷகிபுல் ஹசன், மொஹமதுல்லா போன்ற வீரர்கள் பேட்டிங் செய்யவே வரவில்லை. இதன் மூலம் வங்கதேச அணி இந்த தொடரில் பெரிய ஷாக்கை கொடுக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.

Story first published: Friday, September 29, 2023, 23:49 [IST]
Other articles published on Sep 29, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+