"இப்படியொரு பொழப்பே வேணாம்".. வங்கதேச வீரர்களுக்கு "சம்மட்டி அடி".. வெளுத்துவிட்ட அம்பயர்
டாக்கா: வங்கதேச அம்பயர் ஒருவர், வங்கதேச ஆல் ரவுண்டர் ஷகிப்-அல் ஹசன் செயல்பட்டால் வேதனையுடன் தனது பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார்.
இம்மாத தொடக்கத்தில் வங்கதேசத்தில் நடந்த உள்ளூர் டி20 போட்டி ஒன்றில், வங்கதேச ஆல் ரவுண்டர் ஷகிப்-அல் ஹசன் போட்டியின் நடுவரிடம் நடந்துகொண்ட விதம் கிரிக்கெட் ரசிகர்களை கோபமடையச் செய்தது.
ஒரு கிரிக்கெட் வீரர், எப்படி நடந்து கொள்ள கூடாது என்ற மிகப்பெரிய எடுத்துக்காட்டாக தன்னை நிலைநாட்டி இருந்தார். அடுத்த நூற்றாண்டு வரை இவர் தான் இதற்கு ரோல் மாடலாகவும் இருக்கப் போகிறார்.

கடும் வாக்குவாதம்
வங்கதேசத்தில் இம்மாத தொடக்கத்தில் Dhaka Premier Division Twenty20 கிரிக்கெட் லீக் போட்டிகள் நடைபெற்றது.இதில், மோஹம்மெதான் ஸ்போர்ட்டிங் கிளப் மற்றும் அபஹானி லிமிட்டட் அணிகளுக்கு இடையே போட்டி ஒன்று நடைபெற்றது. இதில், மோஹம்மெதான் அணியின் கேப்டன் ஷகிப்-அல் ஹசன். முதலில் பேட்டிங் செய்த ஷகிப் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்தது. பிறகு, அபஹானி அணி பேட்டிங் செய்துகொண்டிருந்த போது, வங்கதேச அணியின் தனது சக வீரரான முஷ்பிகுர் ரஹீமுக்கு அவர் பந்து வீசினார். அப்போது, ரஹீமுக்கு ஒரு எல்பிடபிள்யூ அப்பீலை ஷகிப் கேட்க, அம்பயர் அவுட் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால், நிதானத்தை இழந்த அங்கேயே ஸ்டெம்ப்புகளை நோக்கி ஓங்கி உதைவிட பைல்ஸ்கள் தெறித்து சென்று விழுந்தன. அதோடு நிற்காமல், அம்பயருடன் கடும் வாக்கு வாதத்திலும் ஈடுபட்டார்.

மோசமான செயல்பாடு
அதன் பிறகு, அபஹானி அணி 5.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 31 ரன்கள் எடுத்திருந்த போது, திடீரென மழை குறுக்கிட, அம்பயர் ஆட்டத்தை நிறுத்துவதாக அறிவித்தார். உடனே, பீல்டிங் செய்த இடத்தில் இருந்து வேக வேகமாக வந்த ஷகிப், அம்பயர் அருகில் இருந்த மூன்று ஸ்டெம்ப்புகளையும் கையோடு பிடிங்கி, தரையில் வேகமாக தூக்கி எறிந்தார். கேட்கவே நாம் தெருவில் விளையாடும் கிரிக்கெட் மேட்ச் போல் இருக்கிறதா? இப்படியொரு மோசமான செயல்பாட்டை உலகத் தரம் வாய்ந்த ஷகிப் அல் ஹசன் வெளிப்படுத்தி இருந்தார்.

சுயமரியாதை
இந்நிலையில், வங்கதேசத்தைச் சேர்ந்த அந்த அம்பயர் மொனிருசம்மான், அம்பயரிங்கில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், "எல்லாம் போதும். நான் இனி அம்பயரிங் செய்ய விரும்பவில்லை. எனக்கு கொஞ்சம் சுய மரியாதை உண்டு, அதனுடன் வாழ விரும்புகிறேன். நடுவர்கள் தவறுகளைச் செய்யலாம், ஆனால் நாங்கள் இந்த முறையில் நடத்தப்பட்டால், இனி அதைச் செய்வதில் எந்த அர்த்தமும் இல்லை, ஏனென்றால் நான் பணத்திற்காக மட்டும் வேலை செய்யவில்லை இல்லை" என்று பொட்டில் அடித்தாற்போல் கூறியிருக்கிறார். மோனிருஸ்மான் மேற்கோளிட்டுள்ளார்

உலக லெவல் பந்தா
இந்தியா போன்ற உலகின் டாப் கிரிக்கெட் அணி வீரர்களே கம்மென்று போட்டிகளில் விளையாடிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருக்க, வங்கதேச வீரர்கள் என்னவோ உலக சாம்பியன் ரேஞ்சுக்கு பந்தா பண்ணுவது தான் ஹைலைட். நாகினி டான்ஸ் ஆடுவது, இந்திய அணியை அவதூறு செய்யும் வகையில் ட்வீட் போடுவது என்று தலையில் இரண்டு கொம்பு முளைத்தது போல் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட மனநிலையில் இருக்கும் வங்கதேச வீரர்களுக்கு உண்மையில் கவுன்சலிங் தான் கொடுக்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications