9 பவுலர்களை பயன்படுத்திய இங்கிலாந்து.. 6 சிக்சர்களை பறக்கவிட்ட இங்கிலாந்து.. பதறிய வங்கதேசம்
கவுகாத்தி: உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி 9 பந்து வீச்சாளர்களை பயன்படுத்தியது.
கவுகாத்தியில் நடைபெற்ற இந்த போட்டியில் மழையால் ஆட்டம் 37 ஓவராக குறைக்கப்பட்டது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணியில் லிட்டன் தாஸ் ஐந்து ரன்களிலும், நஜ்முல் ஹுசைன் இரண்டு ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.

தொடக்க வீரர் தன்சித் ஹசன் அபாரமாக விளையாடி 45 ரன்கள் சேர்த்தார். இதைப் போன்று மெஹந்தி ஹசன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 74 ரன்கள் சேர்க்க 37 ஓவர் முடிவில் வங்கதேச அணி 188 ரன்கள் எடுத்தது. இந்த இன்னிங்ஸில் இங்கிலாந்து 9 பவுலர்களை பயன்படுத்தியது. பயிற்சி ஆட்டம் என்பதால் 11 வீரர்களை கூட பந்துவீச்சில் பயன்படுத்த முடியும்.
இதனால் இங்கிலாந்து அணி யார் யாருக்கெல்லாம் தங்களுடைய அணியில் பந்து வீச தெரியுமா அவர்களை அனைவரையும் இன்றைய ஆட்டத்தில் பயன்படுத்தியது.இதில் அதிகபட்சமாக ரீஸ் டோப்ளி மூன்று விக்கெட்டுகளையும் டேவிட் வில்லி இரண்டு விக்கெட்டுகளையும் ஆதில் ரசித் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.
இதன் அடுத்து டக்வத் லூயிஸ் படி 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் இங்கிலாந்து அணி களம் இறங்கியது. இதில் டேவிட் மாலன் நான்கு ரன்களில் வெளியேற ஜானி பாரிஸ்டோ 34 ரன்கள் சேர்த்தார். நட்சத்திர வீரர் ஜோ ரூட் 26 ரன்களும் ஹாரி புரூக் 17 ரன்களும் சேர்த்தனர்.
அபாரமாக விளையாடிய கேப்டன் ஜாஸ் பட்லர் 15 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்தார். இதேபோன்று மோயின் அலி 39 பந்துகளில் 56 ரன்கள் சேர்த்தார். இதில் ஆறு சிக்ஸர்களும் இரண்டு பவுண்டர்களும் அடங்கும். இதன் மூலம் இங்கிலாந்து அணி 24.1 ஓவரில் எல்லாம் 197 ரன்களை கடந்து வெற்றி பெற்றது.


Click it and Unblock the Notifications