Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வங்கதேசத்திற்கு எதிராக முதல் டெஸ்ட் - இந்திய அணியின் பிளேயிங் லெவன்.. 2 இடத்திற்கு 4 பேர் போட்டி

சிட்டங்காங் : வங்கதேசத்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 7 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.

ரோகித் சர்மா காயம் காரணமாக விலகியுள்ள நிலையில், கேஎல் ராகுல் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார். இந்த தொடர் இந்திய அணிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாகும்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் தற்போ இந்திய அணி 4வது இடத்தில் உள்ளது. இந்த தொடரை இந்திய அணி முழுமையாக கைப்பற்ற வேண்டிய உத்வேகத்தில் உள்ளது.

தொடக்க வீரர் யார்?

தொடக்க வீரர் யார்?

கேஎல் ராகுல் தொடக்க வீரராக களமிறங்க உள்ள நிலையில், ரோகித் சர்மா இடத்திற்கு 2 பேர் போட்டி போடுகின்றனர். சுப்மான் கில்லுக்கு தான் முன்னூரிமை கிடைக்கும். கடந்த 14 டெஸ்ட் இன்னிங்சில் கில் அடிதகபட்சமாக 52 ரன்கள் எடுத்துள்ளார். எனினும், அபிமன்யூ ஈஸ்வரன் நடந்து முடிந்த இந்திய ஏ அணிக்கு எதிரான வங்கதேச தொடரில் 2 சதங்களை விளாசியுள்ளார். இதனால் அபிமன்யூ ஈஸ்வரனை பயன்படுத்துவது தான் சிறப்பாக இருக்கும்.

3 சுழற்பந்துவீச்சாளர்கள்

3 சுழற்பந்துவீச்சாளர்கள்

இந்திய அணியில் நடுவரிசையில் விராட் கோலி, புஜாரா, ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிஷப் பண்ட் என வீரர்கள் தங்களது இடத்தை உறுதி செய்துள்ளனர். இதே போன்று பிளேயிங் லெவனில் 3 சுழற்பந்துவீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்க அதிக வாய்ப்பு உள்ளது. அது, அஸ்வின், அச்ர் பட்டேல் , மற்றும் குல்தீப் யாதவாக இருக்கவே அதிக வாய்ப்பு உள்ளது.

வேகப்பந்துவீச்சாளர் யார்?

வேகப்பந்துவீச்சாளர் யார்?

எனினும் 3வது சுழற்பந்துவீச்சாளராக சௌரப் குமாரும் நல்ல தேர்வாக இருப்பார். இந்திய அணி 3 சுழற்பந்துவீச்சாளர்களை பயன்படுத்தினால், பிளேயிங் லெவனில் 2 வேகப்பந்துவீச்சாளர்களுக்கு தான் இடம் கிடைக்கும். இதில் முகமது சிராஜ் மற்றும் உமேஷ் யாதவ்க்கு முன்னுரிமை வழங்கப்படும். ஆனால் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் உனாட்கட் நல்ல பார்மில் இருப்பதால், அவருக்கு வாய்ப்பு வழங்குவது நல்ல தேர்வாக அமையும்.

பிளேயிங் லெவன்

பிளேயிங் லெவன்

1. கேஎல் ராகுல், 2, சுப்மான் கில், 3, புஜாரா, 4, விராட் கோலி, 5, ஸ்ரேயாஸ் ஐயர், 6, ரிஷப் பண்ட், 7, அஸ்வின், 8, அக்சர் பட்டேல், 9, குல்தீப் யாதவ், 10, உமேஷ் யாதவ் / ஷர்துல் தாக்கூர், 11, முகமது சிராஜ்

Story first published: Tuesday, December 13, 2022, 16:03 [IST]
Other articles published on Dec 13, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+