
நியூசிலாந்து முதல் இன்னிங்ஸ்
இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணியில் ஓப்பனிங் வீரர் டாம் லாதம் ஒரு ரன்னிற்கு அவுட்டான போதும், மற்ற வீரர்கள் மிகச்சிறப்பாக கைக்கொடுத்தனர். வில் யங் 52 (136) ரன்கள், டிவோன் கான்வே 122 (227) ரன்கள் என முதல் விக்கெட்டிற்கு 138 ரன்களை சேர்த்தனர். இதன் பின்னர் களமிறங்கிய ஹென்ட்ரி நிகோலஸ் 75 ரன்கள் சேர்க்க, முதல் இன்னிங்ஸில் அந்த அணி 328 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

2வது இன்னிங்ஸ்
முன்னணி வீரர்களை வைத்துக்கொண்டு சொதப்புவதா என விரக்தியில் இருந்து நியூசிலாந்து வீரர்கள் 2வது இன்னிங்ஸில் மொத்தமாக சொதப்பினர். அந்த அணியில் வில் யங் (69), ராஸ் டெய்லர் (40 ரன்கள்) ஆகியோர் மட்டுமே பெரிய ஸ்கோர் அடிக்க மற்ற அனைவரும் சொதப்பினர். இதனால் நியூசிலாந்து அணி 169 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 40 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது.

எளிய வெற்றி
குறைந்த இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணி தொடக்கத்தில் 2 விக்கெட்டுகளை இழந்தது. எனினும் ஷான்டோ 17, மோமினுல் 13 ரன்கள் சேர்க்க வங்கதேச அணி 2 விக்கெட் இழப்புக்கு 42 ரன்களை சேர்த்து எளிதாக வெற்றி கனியை பறித்தது. இந்த வெற்றியின் மூலம் வரலாற்று சாதனை ஒன்றையும் அந்த அணி படைத்துள்ளது.

வரலாற்று வெற்றி
கடந்த 10 வருடங்களாக எந்தவொரு ஆசிய அணிகளும் நியூசிலாந்து அணியை அதன் மண்ணில் வைத்தே ஒரு டெஸ்ட் வெற்றியை கூட பெற்றதில்லை. ஆனால் 10 வருட காத்திருப்பை முறியடித்து, இன்று வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது வங்கதேச படை. இந்தியாவால் கூட இது முடியவில்லை என்பது தான் ரசிகர்களின் கவலையாக உள்ளது.


Click it and Unblock the Notifications