Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“ஆரம்பிச்சிட்டாங்கடா”.. வங்கதேச அணியின் ஓவர் கொண்டாட்டம்.. வச்சு செய்யும் நெட்டிசன்கள்!

ஓவல்: நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி முதல் முறையாக வெற்றி பெற்று ஆச்சரியம் கொடுத்துள்ளது.

Recommended Video

Bangladesh created history, defeated New Zealand on its own soil | Oneindia Tamil

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள வங்கதேச அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் விறுவிறுப்பாக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

முக்கிய வெற்றி

முக்கிய வெற்றி

வங்கதேச கிரிக்கெட் வரலாற்றில் இது மிக முக்கியமான வெற்றியாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் பலமிக்க நியூசிலாந்து அணியை அதன் மண்ணில் இதுவரை டி20, ஒருநாள் போட்டி, டெஸ்ட் என எந்த வடிவ கிரிக்கெட்டிலும் வங்கதேசம் வென்றதே இல்லை. ஆனால் அது இன்று மாறியுள்ளது. இதே போல நியூசிலாந்துக்கு எதிராக வங்கதேசம் பெறும் முதல் டெஸ்ட் வெற்றியும் இதுவே ஆகும்.

வெற்றி கொண்டாட்டம்

வெற்றி கொண்டாட்டம்

இதனால் இந்த வெற்றியை உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் கவனித்து வருகின்றனர். இந்நிலையில் வங்கதேச அணியின் வெற்றி கொண்டாட்டமும் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. ட்ரெஸ்ஸிங் ரூமில் அனைத்து வீரர்களும் கூச்சல் போட்டுக்கொண்டு, நடனம் ஆடிக்கொண்டு உற்சாகத்துடன் இருக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

நியாபகம் இருக்கிறதா?

நியாபகம் இருக்கிறதா?

வங்கதேச அணியின் வெற்றி கொண்டாட்டம் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாவது வழக்கம். இந்திய அணிக்கு எதிராக ஒருமுறை பாம்பு நடனம் போட்டு பொதுவெளியில் கொண்டாடியதை யாராலும் மறக்க முடியாது. இதன் பின்னர் இந்தியா கொடுத்த பதிலடியால் வங்கதேச அணியின் அந்த கொண்டாட்டம் இன்று வரை விமர்சிக்கப்படுகிறது.

2வது டெஸ்ட்

இதே போல தான் தற்போதும், ஓவர் கொண்டாட்டத்தை போட்டுள்ளனர். இந்த தொடரில் இன்னும் ஒரு டெஸ்ட் போட்டி மீதம் உள்ளதால், நியூசிலாந்து அணி பழித்தீர்க்க காத்துள்ளது. அப்படி ஒருவேளை நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுவிட்டால், வங்கதேச அணியை நெட்டிசன்களிடம் இருந்து காப்பாற்றுவது கடினம் தான்.

Story first published: Wednesday, January 5, 2022, 16:37 [IST]
Other articles published on Jan 5, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+