Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நியூசிலாந்து அணிக்கு திரும்பிய நட்சத்திர வீரர்.. வங்கதேசத்துக்கு எதிராக பவுலிங் தேர்வு

சென்னை : வங்கதேசம் - நியூசிலாந்து இடையே ஆன உலகக்கோப்பை லீக் போட்டி சென்னையில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

நீண்ட காலமாக காயத்தில் இருந்த நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் மீண்டும் அணிக்கு திரும்பி இருக்கிறார். ரசிகர்கள் கேன் வில்லியம்சன் எப்போது அணிக்கு திரும்புவார் என காத்திருந்த நிலையில், நியூசிலாந்து அணியின் மூன்றாவது உலகக்கோப்பை போட்டியிலேயே அவர் அணிக்கு திரும்பி இருக்கிறார்.

Bangladesh vs New Zealand world cup 2023 : Kane Williamson chose to field first

துவக்க வீரர் வில் யங் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக கேன் வில்லியம்சன் அணியில் இடம் பெற்றார். கேப்டன் பொறுப்பையும், டாம் லாதம்-இடம் இருந்து பெற்றுக் கொண்டார்.

வங்கதேசம் சென்ற போட்டியில் தோல்வி அடைந்த நிலையில், நியூசிலாந்து போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்கியது. அந்த அணியில் மஹேதி ஹாசன் நீக்கப்பட்டு மக்மதுல்லா அணியில் சேர்ந்தார்.

இந்தப் போட்டி நடக்கும் சென்னை சேப்பாக்கம் மைதானம் ஸ்பின் பந்துவீச்சுக்கு சாதகமானது என்பதால் வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் திட்டத்தில் இருக்கிறார். அதனாலேயே டாஸில் தோற்ற போது முதலில் பேட்டிங் கூட எங்களுக்கு பிரச்சனை இல்லை என்றார்.

Bangladesh vs New Zealand world cup 2023 : Kane Williamson chose to field first

வங்கதேசம் அணி விவரம் : லிட்டன் தாஸ், தன்சிட் ஹசன், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, மெஹிதி ஹசன் மிராஸ், ஷகிப் அல் ஹசன் (கேப்டன்), முஷ்பிகுர் ரஹீம் (விக்கெட் கீப்பர்), தவ்ஹித் ஹிரிடோய், மஹ்முதுல்லா, தஸ்கின் அகமது, ஷோரிபுல் இஸ்லாம், முஸ்தாபிசுர் ரஹ்மான்

நியூசிலாந்து அணி விவரம் : டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன் (கேப்டன்), டேரில் மிட்செல், டாம் லாதம் (விக்கெட் கீப்பர்), கிளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், மிட்செல் சான்ட்னர், மாட் ஹென்றி, லாக்கி பெர்குசன், டிரென்ட் போல்ட்

Story first published: Friday, October 13, 2023, 14:14 [IST]
Other articles published on Oct 13, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+