யாரு? என்னன்னு தெரிய வேணாமா?.. அஸ்வினை சீண்டிப்பார்த்த வங்கதேச வீரர்.. பதிலடி இருக்கு போலையே!
சட்டோகிராம்: வங்கதேச அணியுடனான டெஸ்ட் தொடரில் இந்திய வீரர் அஸ்வினை சீண்டி பார்த்த விக்கெட் கீப்பருக்கு செய்கை ரெடி ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சட்டோகிராம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 404 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
300 ரன்களுக்குள் சுருண்டிருக்க வேண்டிய இந்திய அணியை 400 ரன்களுக்கும் மேல் அழைத்துச்சென்று ரவிச்சந்திரன் அஸ்வின் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

முதல் டெஸ்ட் போட்டி
ஸ்ரேயாஸ் ஐயர் ( 86 ) சட்டீஸ்வர் புஜாரா (90) என அடித்து சென்றாலும் இந்திய அணி 278 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்திருந்தது. அப்போது களத்திற்கு வந்த அஸ்வின் தூண் போல நிலைத்து நின்றார். 113 பந்துகளை சந்தித்த அவர் 58 ரன்களை அடித்தார். இதே போல எதிரில் இருந்த குல்தீப் யாதவுக்கும் டிப்ஸ்களை கொடுத்து பார்ட்னர்ஷிப் அமைத்தது ரசிகர்களிடம் பாராட்டை பெற்றது.

புதிய பிரச்சினை
இந்நிலையில் அஸ்வினை சீண்டிப்பார்த்த வங்கதேச வீரர் குறித்து இந்திய ரசிகர்கள் விமர்சிக்க தொடங்கியுள்ளனர். அரைசதம் அடித்த அஸ்வின், சிக்ஸர்களை அடிக்க நினைத்தார். அதற்காக 132வது ஓவரில் ஸ்பின்னர் மெஹிடி ஹாசன் வீசிய பந்தை இறங்கி வந்து ஸ்ட்ரைக் சிக்ஸர் அடிக்க நினைத்தார். ஆனால் பந்து மிஸ்ஸாகி விக்கெட் கீப்பரிடம் சென்று விக்கெட்டை பறிகொடுத்தார்.

அஸ்வினிடம் சீண்டல்
ஆனால் விக்கெட் கீப்பர் நூருல் ஹாசன், சாதாரணமாக அந்த ஸ்டம்பிங்கை செய்யவில்லை. பந்தை பிடித்த அவர், அஸ்வினை பார்த்துக்கொண்டே எங்கே வா பார்ப்போம், முடிந்தால் வா பார்ப்போம் என்பது போல செய்கை காட்டிக்கொண்டே பின்னர் அஸ்வின் அருகே சென்றதும் ஸ்டம்பிங் செய்து அவுட்டாக்கினார். இதனை கண்ட ரசிகர்கள் கோபத்தில் உள்ளனர்.

பதிலடி இருக்கு
நூருல் ஹாசனின் இந்த செயலுக்கு அஸ்வின் நிச்சயம் 2வது இன்னிங்ஸின் போது பதிலடி கொடுப்பார் என்றும் அஸ்வின் பற்றி தெரியாமல் விளையாடுகிறார் என்றும் கூறி வருகின்றனர். இதே நூருல் ஹாசனின் குழந்தைதனமான செயலால்தான் டி20 உலகக்கோப்பையில் ஜிம்பாப்வே உடனான போட்டியில் வங்கதேச அணி கடைசி பந்தில் துரதிஷ்டவசமாக தோற்றது.


Click it and Unblock the Notifications