Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தடையில் இருந்த போது யோகா டீச்சரா மாறிடலாம்னு நினைச்சேன்.. ஆஸி. வீரர் பான்கிராப்ட்டின் சோகக் கதை

மெல்போர்ன் : ஆஸ்திரேலிய வீரர் கேமரான் பான்கிராப்ட் 9 மாத தடைகாலத்தின் முடிவில் இருக்கிறார்.

அடுத்த வாரம் தடை முடிய இருக்கும் நிலையில், தன் தடை காலத்தில் தான் எப்படி இருந்தேன் என்பது குறித்து பத்திரிக்கை ஒன்றில் எழுதி உள்ளார்.

தடை ஏன்?

தடை ஏன்?

தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரில் கடந்த மார்ச் மாதம் பான்கிராப்ட் பந்தை உப்புத் தாள் கொண்டு சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கினார். இவருக்கு பந்தை சேதப்படுத்த யோசனை கொடுத்த டேவிட் வார்னர், அதை தடுத்து நிறுத்தி இருக்க முடிந்தும், தடுக்காமல் விட்ட கேப்டன் ஸ்மித் ஆகியோர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகத்தால் தடை செய்யப்பட்டனர்.

என்ன ஆனார் பான்கிராட்?

என்ன ஆனார் பான்கிராட்?

ஊடகங்கள் பிரபலமான வார்னர் மற்றும் ஸ்மித் பற்றியே இத்தனை காலமும் செய்திகள் வெளியிட்டு வந்தன. பான்கிராப்ட் என்ன ஆனார் என்றே பலருக்கும் தெரியவில்லை. இந்த நிலையில் தன் கடினமான தடைக் காலத்தை பற்றி கூறினார் பான்கிராப்ட்.

கிரிக்கெட்டை விட்டு விடலாமா?

கிரிக்கெட்டை விட்டு விடலாமா?

உள்ளூர் அணியில் சேர அவர் முயற்சி செய்த போது, தன் நிலையை எடுத்துக் கூற வேண்டிய சூழ்நிலை வந்துள்ளது. அப்போது தான் கிரிக்கெட்டை மொத்தமாக விட்டுவிடலாமா என எண்ணியுள்ளார்.

யோகா பயிற்சியாளர்

யோகா பயிற்சியாளர்

அப்படி கிரிக்கெட்டை விட்டுவிட்டால் அடுத்து என்ன செய்வது? தன் கடின வாழ்க்கையை எளிதாக கடக்க யோகா கற்றுக் கொண்ட பான்கிராப்ட், அதையே தன் வாழ்க்கையாக மாற்றிக் கொண்டு யோகா பயிற்சி அளிப்பவராக மாறி விடலாமா என யோசித்துள்ளார்.

மீண்டும் கிரிக்கெட் ஆட வருகிறார்

மீண்டும் கிரிக்கெட் ஆட வருகிறார்

எனினும், ஒருவாறு தன் தடையை கடந்துள்ள அவர் முற்றிலும் மாறிய ஒரு பான்கிராப்ட்டாக பிக் பாஷ் லீக் தொடரில் அடுத்த வரம் முதல் பங்கேற்க உள்ளதாக தெரிவித்துள்ளார். பான்கிராப்ட்டின் இரண்டாம் இன்னிங்க்ஸ் சிறப்பாக அமைய வாழ்த்துவோம்!!

Story first published: Saturday, December 22, 2018, 14:47 [IST]
Other articles published on Dec 22, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+