Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நாதஸ் திருந்திட்டான்.. யார் சொன்னா.?.அவனே சொன்னான்..! பார்மி ஆர்மிக்கு குவியும் பாராட்டு..!!

லண்டன்; நமது ஊரில் பிக் பாஸ் நட்சத்திரங்களுக்கும், சமூக வலைத்தளங்களில் வரும் அழகான பெண்களுக்கும் ரசிகர்கள் ஆர்மி தொடங்குவது வழக்கம்

இது இந்தியாவில் தொடங்கப்பட்ட கலாச்சாரம் அல்ல. ஏற்கனவே உலகம் முழுவதும் இந்த கலாச்சாரம் உண்டு. குறிப்பாக,தங்களுக்கு பிடித்த அணிகளுக்கு என ரசிகர்கள் பட்டாளம் ஆர்மி தொடங்குவது வழக்கம்.

அந்த வகையில், இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ரசிகர்கள் தொடங்கிய அமைப்புக்கு பெயர் தான் பார்மி ஆர்மி.

பார்மி ஆர்மி

பார்மி ஆர்மி

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, உலகத்தின் எந்த இடத்தில் விளையாடினாலும், இந்த பார்மி ஆர்மி அங்கு சென்று ஆதரவளிக்கும். வெறும் ஆதரவோடு மட்டும் இல்லாமல் இங்கிலாந்து அணியை புகழ்ந்து பாடும். எதிரணி வீரர்களை கலாய்த்து ஆட்டம் போடும். பவுண்டரிகோட்டில் நிற்கும் எதிரணி வீரர்கள் , இவர்கள் கையில் சிக்கினால் அவ்வளவு தான் கலாய்த்து தள்ளிவிடுவார்கள்

மனநலம்

மனநலம்

இந்த நிலையில், உலகம் முழுவதும் மனம் அழுத்தம் மற்றும் அதற்கான சிகிச்சைகள் குறித்து மக்களிடையே தற்போது தான் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், மன நலம் காரணமாக சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து காலவரையின்றி டிம் பெயின் விலகியுள்ளார். அவரை இந்த பார்மி ஆர்மி கிண்டல் செய்தால், டிம் பெயின் மேலும் பாதிக்கப்படலாம் என அஞ்சப்பட்டது.

முடிவு

முடிவு

இந்த நிலையில் தான் பார்மி ஆர்மி ஒரு முடிவை எடுத்துள்ளது. இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் அவர்கள் வெளியிட்டுள்ள பதிவில், ஆஸ்திரேலியாவிற்கு மகிழ்ச்சியாக இருக்கவும், நமது அணிக்கு ஆதரவு அளிக்கவும் தான் நாம் செல்கிறோம். ஆனால் ரசிகர்கள் யாரும் டிம் பெயினை வம்பிழுக்க கூடாது. டிம் பெயின் மனதை காயப்படுத்தும் எந்த செயலையும் நாம் செய்யக் கூடாது என்று அவர்களது படை வீரர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

வரவேற்பு

வரவேற்பு

இந்த பதிவை கண்ட ஆஸ்திரேலிய வீரர்களும், ரசிகர்களும் பார்மி ஆர்மியின் இந்த செயலுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். பார்மி ஆர்மியின் இந்த செயல் ஒரு நல்ல மாற்றத்திற்கான தொடக்க புள்ளி என்றும், மனநல பாதிப்பால் காயமடைந்தவர்களுக்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதை பார்மி ஆர்மி உணர்த்திவிட்டதாகவும் பலர் பாராட்டு தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலிய வீரர்களே கண்டும் அஞ்சும் பார்மி ஆர்மியின் இந்த முடிவு, அவர்களை நிம்மதி அடைய செய்துள்ளது.

Story first published: Saturday, November 27, 2021, 16:43 [IST]
Other articles published on Nov 27, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+