கோஹ்லி Vs ஆண்டர்சன்...இப்போ வரைக்கும் கோஹ்லி தான் டாப்!
லண்டன் : இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் தற்போது இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பாக இது இந்திய கேப்டன் விராட் கோஹ்லி மற்றும் நம்பர் 1 டெஸ்ட் பௌலர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகிய இருவருக்கும் இடையே நடைபெறும் போட்டியாகவே கருதப்பட்டது.

ஏனென்றால் கடந்த 2014 ஆம் ஆண்டு இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுபயணம் செய்து விளையாடியபோது ஆண்டர்சன்,விராட் கோஹ்லியை நான்கு முறை ஆட்டமிழக்க செய்தார். அத்தொடரில் விராட் கோஹ்லி 10 இன்னிங்ஸ்களில் 134 ரன்களை மட்டுமே குவித்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது மூன்று டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் விராட் கோஹ்லியை வீழ்த்த முடியாமல் தடுமாறி வருகிறார் ஆண்டர்சன். அவர் மற்ற விக்கெட்களை வீழ்த்திய போதிலும் அவரால் இதுவரை விராட் கோஹ்லி விக்கெட்டை மற்றும் வீழ்த்த முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தொடரில் அவரது பந்துவீச்சில் மூன்று முறை விராட் கோஹ்லிக்கு கேட்ச் தவற விடப்பட்டது குறிப்பிடத்தக்கது. கோஹ்லி 3 போட்டிகளில் 440 ரன்களை குவித்து இந்த தொடரில் அதிக ரன்களை குவித்த வீரர்கள் வரிசையில் முதல் இடத்தில் உள்ளார். இதில் 2 சதங்களும் அடங்கும்.
விராட் கோஹ்லி - 2014 Vs 2018
விராட் கோஹ்லி கடந்த 2014 ஆம் ஆண்டு இங்கிலாந்து தொடரில் 8 இன்னிங்ஸ்களில் ஆண்டர்சனின் 50 பந்துகளை சந்தித்து 19 ரன்களை மட்டுமே எடுத்தார். நான்கு முறை அவரது பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
தற்போதைய தொடரில் 5 இன்னிங்ஸ்களில் 212 பந்துகளை சந்தித்து 86 ரன்களை எடுத்துள்ளார். ஒருமுறை கூட ஆண்டர்சன் பந்துவீச்சில் ஆட்டமிழக்கவில்லை என்பது சிறப்பு.
இன்னும் இரண்டு டெஸ்ட்கள் மீதம் உள்ள நிலையில் ஆண்டர்சன் விராட் கோஹ்லியை வீழ்த்துவாரா என்பதை பொறுதிருந்து தான் பார்க்க வேண்டும்.
நான்காவது டெஸ்ட் போட்டி வரும் 30ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
Story first published: Sunday, August 26, 2018, 11:24 [IST]
Other articles published on Aug 26, 2018


Click it and Unblock the Notifications