For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்திய மக்களிடையே செல்வாக்குள்ளவராக மிதாலி ராஜ் ... பிபிசி பாராட்டு

By Staff

டெல்லி: இந்தியாவில் மக்களிடையே செல்வாக்கு உள்ள பெண்ணாக, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாஜி ராஜை, பிபிசி தேர்வு செய்துள்ளது.

பிபிசி நிறுவனம், உலகின், 100 சவால்களை சந்தித்த பெண்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. விளையாட்டு, அறிவியல், தொழில்நுட்பம் என பல்வேறு துறைகளில் சவால்களை சந்தித்து மக்களின் அபிமானத்தை பெற்றவர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர். அதில் இந்தியாவில் இருந்து ஏழு பேர் இடம் பெற்றுள்ளனர்.

 BBC honour for Mithali

இந்தியப் பட்டியலில் மிதாலி ராஜ் முதலிடத்தில் உள்ளார். 34 வயதாகும் மிதாலி ராஜ், மகளிர் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

சமீபத்தில், இங்கிலாந்தில் நடந்த மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி பைனலுக்கு முன்னேறியது. அதன்பிறகு, 34 வயதாகும் கேப்டன் மிதாலி ராஜின் பெயர் பட்டித் தொட்டியெல்லாம் பரவியது.

சமீபத்தில் மிதாலியின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மிதாலி ராஜாக விரைவில் திருமணமாக உள்ள சமந்தா நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், பிபிசியின், மக்களிடையே செல்வாக்குள்ள பெண்கள் பட்டியலில் அவர் சேர்ந்துள்ளார்.

Story first published: Sunday, October 1, 2017, 11:54 [IST]
Other articles published on Oct 1, 2017
English summary
Indian Women cricket captain Mithali Raj named as most influential women of India
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X