Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

45 பந்தில் 83 ரன்.. சிக்ஸ் மட்டும் தான் அடிப்பேன்.. அடம் பிடித்து கதி கலங்க வைத்த அதிரடி மன்னன்!

மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பேஷ் லீக் டி20 தொடரில் அதிரடி வீரர் கிளென் மேக்ஸ்வெல் மீண்டும் ஒரு அதிரடி ஆட்டம் ஆடி எதிரணியை மிரள வைத்தார்.

169 ரன்கள் சேஸிங் செய்ய வேண்டும் என்ற நிலையில், ஒரு கேப்டன் இன்னிங்க்ஸ் ஆடினார் மேக்ஸ்வெல்.

எளிதான வெற்றி

எளிதான வெற்றி

எட்டு பந்துகள் மீதமிருந்த நிலையிலேயே அவரது மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி எளிதாக வெற்றி பெற்று அசத்தியது. 83 ரன்கள் குவித்த மேக்ஸ்வெல் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவர் வெறும் ஒரே ஒரு ஃபோர் மட்டுமே அடித்த அவர், ஏழு சிக்ஸ் அடித்து அசத்தினார்.

என்ன போட்டி?

என்ன போட்டி?

பிக் பேஷ் லீக் தொடரில் மெல்போர்ன் ரெனேகேட்ஸ் - மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் இடையே ஆன லீக் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் மெல்போர்ன் ரெனேகேட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

ரெனேகேட்ஸ் ரன் குவிப்பு

ரெனேகேட்ஸ் ரன் குவிப்பு

மெல்போர்ன் ரெனேகேட்ஸ் அணியின் துவக்க வீரர் ஷான் மார்ஷ் 63, ஹாரிஸ் 42 ரன்கள் குவித்தனர். அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 168 ரன்கள் குவித்தது.

கடின இலக்கு

கடின இலக்கு

169 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கியது மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி. அந்த அணியின் துவக்க வீரர் ஸ்டோனிஸ் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். கார்ட்ரைட் 35, டங்க் 15 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினர்.

ஸ்டார்ஸ் அணி தவிப்பு

ஸ்டார்ஸ் அணி தவிப்பு

ஸ்டார்ஸ் அணி 6.5 ஓவர்களில் 54 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தவித்து வந்தது. அப்போது களத்தில் இருந்த லார்கின் உடன் ஜோடி சேர்ந்தார் கேப்டன் கிளென் மேக்ஸ்வெல்.

அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

துவக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை கையில் எடுத்த அவர் சரமாரியாக சிக்ஸர்கள் அடித்து மிரட்டினார். லார்கின் சற்று நிதான ஆட்டம் ஆட, மேக்ஸ்வெல் போட்டியை தன் கையில் எடுத்துக் கொண்டார்.

ஏழு சிக்ஸர்கள்

ஏழு சிக்ஸர்கள்

45 பந்துகளில் 83 ரன்கள் குவித்தார் மேக்ஸ்வெல். அவரது அதிரடி ஆட்டத்தில் ஏழு சிக்ஸர்கள் அடங்கும். பெயருக்கு ஒரே ஒரு ஃபோர் மட்டுமே அடித்தார் அவர். அவரது ஆட்டத்தால் ஸ்டார்ஸ் அணி 18.4 ஓவர்களில் வெற்றி பெற்றது.

Story first published: Saturday, January 11, 2020, 19:21 [IST]
Other articles published on Jan 11, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+