Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

BBL 2023- ஒரு ரன்னில் மிஸ் ஆன சதம்.. முதல் போட்டியிலேயே வாண வேடிக்கை..மேக்ஸ்வெல் அணி தோல்வி

பிரிஸ்பேன் : 13 வது பிக் பேஷ் லீக் தொடர் டிசம்பர் 7ஆம் தேதி முதல் தொடங்கி ஜனவரி 24ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் பெர்த் அணி நடப்பு சாம்பியனாக களமிறங்குகிறது.

கடந்த தொடரில் இறுதி ஆட்டத்தில் அந்த அணி பிரிஸ்பேன் ஹீட் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.இந்த நிலையில் 8 அணிகள் இந்த தொடரில் மோதுகிறது.

BBL 2023 - Brisbane Heats trash Melbourne stars team by 103 runs

கடந்த முறை 61 போட்டிகள் நடைபெற்ற நிலையில் அது விமர்சனங்களை சந்தித்தது. இதனால் மீண்டும் 44 போட்டிகளாக இது சுருக்கப்பட்டிருக்கிறது. இந்த போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் கண்டு களிக்கலாம். இந்த நிலையில் முதல் போட்டியில் பிரஸ்பேன் ஹீட் அணியும் மெல்போன் ஸ்டார்ஸ் அணியும் மோதின.

இதில் டாஸ் வென்ற மெல்போர்ன அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறிங்கிய பிரிஸ்பேன்அணியில் கேப்டன் உஸ்மான் கவஜா 28 ரன்களும், மார்னஸ் லாபஸ்சேன் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க நியூசிலாந்து வீரர் காலின் முன்ரோ அதிரடியாக விளையாடி 61 பந்துகளில் 99 ரன்கள் சேர்த்தார்.

இதில் ஒன்பது பவுண்டரிகளும் 5 சிக்ஸர்களும் அடங்கும். காலின் முன்றோ ஆட்டமிழக்காமலே கடைசி வரை நின்று பந்து ஏதும் இல்லாததால் சதத்தை தவறவிட்டார். இதனால் பிரிஸ்பேன் அணி 20 ஓவர் முடிவில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்தது. 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மெல்போர்ன் அணியில் முன்வரிசை வீரர்கள் தடுமாறினர். அந்த அணியின் கேப்டன் மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடி மூன்று பவுண்டரிகள் ஒரு சிக்சர் எடுத்தார்.

எனினும் அவர் 23 ரன்களில் வெளியேறினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மார்கஸ் ஸ்டோனிஸ் இரண்டு ரன்களில் வெளியேற ஹில்டன் கார்ட்ரைட் மட்டும் அதிகபட்சமாக 33 ரன்கள் சேர்த்தார்.மற்ற வீரர்கள் எல்லாம் சொற்பரன்களில் ஆட்டம் இழக்க மெல்போர்ன் அணி 116 ரன்களில் ஆட்டம் இழந்தது. இதனை அடுத்து முதல் ஆட்டத்தில் 103 ரன்கள் வித்தியாசத்தில் பிரிஸ்பேன் ஹீட் அணி வெற்றி பெற்றது.

Story first published: Thursday, December 7, 2023, 23:31 [IST]
Other articles published on Dec 7, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+