Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வீடியோ- உலகின் சிறந்த ஃபில்டர் இவர் தான்.. யார் இந்த ஜார்டன் சில்க்.. சூப்பர் மேன் போல் பாயும் வீரர்

மும்பை : சர்வதேச கிரிக்கெட்டில் பல தலைசிறந்த பீல்டர்கள் பல்வேறு காலத்தில் விளையாடி இருக்கிறார்கள். பில்டிங் என்றாலே நம் அனைவர் மனதிலும் வரும் முதல் பெயர் தென்னாப்பிரிக்காவின் ஜான்டி ரூட்ஸ்.

அதன் பிறகு முஹம்மது கைஃப், சுரேஷ் ரெய்னா என பல வீரர்கள் வந்தாலும் அவர்கள் எல்லாம் சர்வதேச கிரிக்கெட்டில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

BBL 2024 - Who is Jordan silk - Best fielder in the world - watch his catching skills

ஆனால் ஒரு சர்வதேச போட்டி கூட விளையாடாத ஆஸ்திரேலிய வீரர் ஒருவர் தற்போது பீல்டிங்கில் உலகத்தின் சிறந்த வீரர்களுக்கான பெயர் பெற்றிருக்கிறார். அவர் பெயர் ஜார்டன் சில்க். 31 வயதான சில்க் பிக் பேஸ் லீக் தொடர் சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக விளையாடுகிறார். ஜார்டன்ஸ் சில்க் பவுண்டரி லைனில் நிற்கிறார் என்றால் அந்தப் பக்கத்தில் பந்தை அடிப்பதற்கே வீரர்கள் அச்சப்படுவார்கள்.

அந்த அளவுக்கு மிகவும் பயங்கரமான ஒரு பீல்ட்ராக திகழ்கிறார். பந்து அவரை நோக்கி சென்றால் ஒன்று அது சிக்ஸர் செல்லாது , இல்லையென்றால் கேட்ச் ஆகிவிடும் என்ற அச்சம் கொள்ளும். அந்த அளவுக்கு பேட்ஸ்மேன்கள் திகழ்கிறார்கள். இதேபோன்று இன்னர் சர்க்களில் நின்றாலும் அவரை நோக்கி பந்தை அடித்தால் எப்படியாவது அதனை கேட்ச் பிடித்து விடுவார் என்ற நினைப்பு பேட்ஸ்மேன்களின் அடி மனதில் எப்போதுமே இருக்கும்.

மிகப்பெரிய பீல்ட்ராக திகழும் சில்க் இதுவரை 113 டி20 போட்டிகளில் விளையாடி 2017 ரன்கள் அடித்திருக்கிறார். பேட்டிங் சராசரி 31 என்ற அளவில் இருக்கிறது. அதிகபட்சமாக 78 ரன்கள் அடித்திருக்கிறார். இதுவரை ஆறு அரை சதம் அடித்திருக்கிறார். ஜார்டன் சில்க்கை ஒரு பீல்டராகவே சிட்னி சிக்ஸர் அணி பயன்படுத்தி வருகிறது. ஜார்டன் பீல்டிங்கை பார்த்து பாராட்டியுள்ள ரிக்கிபாண்டிங், இவர் ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய சொத்து. நான் பார்த்ததிலே சிறந்த பீல்டராக தற்சமயத்தில் திகழ்கிறார் என்று பாராட்டியிருக்கிறார்.

Story first published: Wednesday, January 24, 2024, 20:57 [IST]
Other articles published on Jan 24, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+