Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

BBL: "என்னை அவமானப்படுத்திவிட்டார்".. ஸ்மித்துக்கு எதிராக பொங்கிய பாபர்.. ஆஸ்திரேலியாவில் சர்ச்சை

சிட்னி: ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் லீக் (BBL) தொடரில், சிட்னி சிக்சர்ஸ் அணி வெற்றி பெற்றாலும், அந்த அணியின் டிரெஸ்ஸிங் ரூமில் ஒரு பெரிய சர்ச்சை வெடித்துள்ளது. பாகிஸ்தான் நட்சத்திர வீரர் பாபர் ஆசம், ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் மீது கடும் அதிருப்தியில் இருந்த நிலையில், "ஸ்மித் என்னை அவமானப்படுத்திவிட்டார்" என்று சக ஆஸ்திரேலிய வீரர்களிடம் புலம்பிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மைதானத்தில் ஸ்மித் செய்த ஒரு செயல், பாபர் ஆசமின் ஈகோவை சீண்டிப்பார்த்துள்ளது.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிட்னி சிக்சர்ஸ் - சிட்னி தண்டர் இடையிலான போட்டியில், 11-வது ஓவரின் கடைசி பந்தில் பாபர் ஆசம் சிங்கிள் தட்ட முயன்றார். அப்போது அவர் 40 ரன்களில் இருந்தார். ஆனால் மறுமுனையில் இருந்த ஸ்டீவ் ஸ்மித், "வேண்டாம்.. நீ ஓடாதே" என்று தடுத்து, பாபரை ஸ்ட்ரைக்கில் இருந்து மாற்ற மறுத்துவிட்டார்.

BBL 2026 Babar Azam Fumes at Steve Smith in Dressing Room After Single Denial Row

அடுத்த ஓவரில் 'பவர் சர்ஜ்' என்பதால், தானே ஸ்ட்ரைக்கில் இருந்து அடிக்க வேண்டும் என்று ஸ்மித் நினைத்தார். பாபர் ஆசமின் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக, சுமார் 120 என்பதாக இருந்ததும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

மைதானத்தில் ஸ்மித் தடுத்தபோதே பாபர் ஆசமின் முகம் மாறியது. போட்டி முடிந்த பிறகு டிரெஸ்ஸிங் ரூம் சென்ற அவர், சக வீரர்களிடம் தனது ஆதங்கத்தைக் கொட்டியதாக ஆஸ்திரேலிய ஊடகமான 'CODE Sports' செய்தி வெளியிட்டுள்ளது.

"நான் ஒரு சர்வதேச கிரிக்கெட் வீரர். என்னால் அடிக்க முடியாதா? வேண்டுமென்றே ஸ்ட்ரைக்கை வைத்துக்கொண்டு, என்னை அவர் அவமானப்படுத்திவிட்டார். எனக்கு மரியாதை கொடுக்கவில்லை" என்று பாபர் ஆசம் வருத்தத்துடன் பேசியதாகக் கூறப்படுகிறது.

ஆனால் ஸ்மித் போட்டிக்கு பின் அளித்த பேட்டியில் இதை மறுத்து இருந்தார். "மைதானத்தின் ஒரு பக்க பவுண்டரி தூரம் மிகவும் குறைவு. அந்தப் பக்கம் என்னால் எளிதாக சிக்ஸர் அடிக்க முடியும் என்று நம்பினேன். அதனால் தான் ஸ்ட்ரைக்கை நானே வைத்துக்கொண்டேன். அது வேலை செய்தது" என்று ஸ்மித் விளக்கம் அளித்து இருந்தார்.

ஸ்மித் சொன்னது போலவே, அடுத்த ஓவரில் அவர் 32 ரன்களை விளாசித் தள்ளினார். ஆனால் பாபர் ஆசம், தனக்கு வாய்ப்பு கிடைத்த அடுத்த பந்திலேயே (13-வது ஓவர்) அவுட் ஆகி, கோபத்தில் பவுண்டரி குஷனை எட்டி உதைத்துவிட்டுச் சென்றார்.

பாபர் ஆசம் வருத்தப்பட்டாலும், ஆஸ்திரேலிய பவுலர் மிட்செல் ஸ்டார்க் ஸ்மித்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். "டி20 கிரிக்கெட்டில் மேட்ச்-அப் முக்கியம். ஸ்மித் தனக்குச் சாதகமான பவுலரை எதிர்கொள்ள நினைத்தார். அதில் தவறில்லை" என்று கூறியுள்ளார். எது எப்படியோ, ஸ்மித் 42 பந்துகளில் சதம் அடித்து ஹீரோ ஆகிவிட்டார். பாபர் ஆசமோ அவமானப்பட்டதாக நினைத்து சோகத்தில் மூழ்கியுள்ளார்.

Story first published: Saturday, January 17, 2026, 19:56 [IST]
Other articles published on Jan 17, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+