Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

BBL: "பாபரை அசிங்கப்படுத்தினேனா? நடந்தது இதுதான்”.. ஓப்பனாக பேசிய ஸ்மித்.. ஸ்டார்க் ஆதரவு

சிட்னி: பிக் பாஷ் லீக் (BBL) தொடரில் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் திரும்பிப் பார்க்க வைத்த அந்த "சிங்கிள்" விவகாரம் குறித்து ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் மௌனம் கலைத்துள்ளார். ஏன் பாபர் ஆசமை சிங்கிள் ஓட விடாமல் தடுத்தேன் என்பதற்கான அதிரடி காரணத்தையும் அவர் விளக்கியுள்ளார்.

சிட்னி சிக்சர்ஸ் மற்றும் சிட்னி தண்டர் அணிகளுக்கு இடையே வெள்ளிக்கிழமை நடைபெற்ற போட்டியில், ஸ்டீவ் ஸ்மித் சிங்கிள் ஓட மறுத்ததும், அதனால் பாபர் ஆசம் கடுப்பானதும் பெரிய விவாதமானது. போட்டி முடிந்த பிறகு சேனல் 7-க்கு அளித்த பேட்டியில் ஸ்மித் தனது திட்டத்தை விவரித்தார்.

BBL 2026 Steve Smith Reveals Why He Denied Babar Azam a Single vs Sydney Thunder

"அது ஒரு திட்டமிட்ட முடிவு. 10 ஓவர்கள் முடிந்தவுடனேயே 'பவர் சர்ஜ்' (Power Surge - பீல்டிங் கட்டுப்பாடுகள் உள்ள 2 ஓவர்கள்) எடுக்கச் சொல்லி பயிற்சியாளர்கள் கூறினர். ஆனால் நான் ஒரு ஓவர் பொறுத்திருக்கச் சொன்னேன். மைதானத்தின் ஒரு பக்கம் பவுண்டரி எல்லை மிகவும் சிறியதாக இருந்தது. அந்தப் பக்கம் சிக்ஸர் அடிப்பது எனக்கு எளிதாக இருக்கும் என்று நம்பினேன்."

"அதனால் தான் 11-வது ஓவரின் கடைசி பந்து பாபர் ஆசம் அடித்தபோது, நான் சிங்கிள் வேண்டாம் என்று தடுத்து, ஸ்ட்ரைக்கை நானே வைத்துக்கொண்டேன். அந்த ஓவரில் எப்படியாவது 30 ரன்கள் அடிக்க வேண்டும் என்று நினைத்தேன், அதிர்ஷ்டவசமாக 32 ரன்கள் கிடைத்தது. அது நல்ல முடிவாக அமைந்தது" என்று ஸ்மித் சிரித்துக்கொண்டே கூறினார்.

ஸ்மித் தனது திட்டத்தை வெற்றிகரமாக முடித்தாலும், பாபர் ஆசம் அதில் மகிழ்ச்சியாக இல்லை என்பதையும் ஸ்மித் ஒப்புக்கொண்டார். "நான் சிங்கிள் வேண்டாம் என்று சொன்னது பாபர் ஆசமுக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை என்று நினைக்கிறேன்," என்று அவர் குறிப்பிட்டார்.

உண்மையில், ஸ்மித் செய்த செயலால் அதிருப்தியடைந்த பாபர், அடுத்த ஓவரிலேயே கவனச்சிதறலால் 47 ரன்களில் அவுட் ஆனார். வெளியேறும்போது பவுண்டரி குஷனை பேட்டால் அடித்துத் தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.

இதற்கிடையில், சக வீரரான மிட்செல் ஸ்டார்க் ஸ்டீவ் ஸ்மித்தின் செயலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். "நான் அந்தச் சம்பவத்தை நேரில் பார்க்கவில்லை. ஆனால் இது டி20 கிரிக்கெட்டின் ஒரு பகுதிதான். ஒரு பேட்ஸ்மேனுக்கு குறிப்பிட்ட பவுலரை எதிர்கொள்வது எளிதாக இருக்கும் என்று தோன்றினால், ஸ்ட்ரைக்கை தக்கவைப்பதில் தவறில்லை. ஸ்மித் அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி 32 ரன்கள் அடித்தார். இது அணிக்குத் தேவை" என்று ஸ்டார்க் கூறியுள்ளார்.

எது எப்படியோ, ஸ்மித்தின் அந்த ஒரு முடிவு போட்டியின் போக்கையே மாற்றி, சிட்னி சிக்சர்ஸ் அணிக்கு வெற்றியையும், ஸ்மித்துக்கு 42 பந்துகளில் ஒரு சதத்தையும் பரிசளித்தது.

Story first published: Saturday, January 17, 2026, 12:10 [IST]
Other articles published on Jan 17, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+