மரண அடி அடித்த ஸ்டீவ் ஸ்மித்.. ஐபிஎல்-இல் எனக்கு இடமில்லையா.. அரண்டு போன சிட்னி.. 58 பந்தில் சதம்
சிட்னி: ஐபிஎல் அணிகளால் புறக்கணிக்கப்பட்ட ஆஸ்திரேலிய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் ஆஸ்திரேலியாவின் டி20 தொடரான பிக் பாஷ் லீகில் அதிரடியாக சதம் அடித்து மிரட்டி இருக்கிறார். ஸ்டீவ் ஸ்மித் பிக் பாஷ் லீக் தொடரில் சிட்னி சிக்ஸர்ஸ் அணியில் இடம் பெற்று ஆடி வருகிறார்.
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்த நிலையில் அவர் பிக் பாஷ் லீக் தொடரில் விளையாடி வருகிறார். பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தனது சொந்த மைதானமான சிட்னியில் அவர் 58 பந்துகளில் சதம் அடித்து வியக்க வைத்தார்.

மேலும், 64 பந்துகளில் 121 ரன்கள் குவித்து கடைசி வரை நாட் அவுட் ஆக இருந்தார் ஸ்டீவ் ஸ்மித். துவக்க வீரராக இறங்கி அவர் சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் தனது ஆட்டத்தில் 10 ஃபோர் மற்றும் 7 சிக்ஸர்களை அடித்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 159 ஆக இருந்தது.
கடந்த சில ஆண்டுகளாக ஸ்டீவ் ஸ்மித்தின் பேட்டிங் ஃபார்ம் ஊசலாட்டத்தை எதிர்கொண்டு இருந்த நிலையில், அவர் தற்போது உச்சகட்ட ஃபார்முக்கு திரும்பி இருக்கிறார். இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இரண்டு சதம் அடித்த அவர், தற்போது டி20 போட்டியிலும் சதம் அடித்து இருக்கிறார்.
ஸ்டீவ் ஸ்மித் 121 ரன்கள் அடித்ததை அடுத்து சிட்னி சிக்ஸர்ஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் எடுத்தது, ஸ்டீவ் ஸ்மித் நிதானமாக ஆடுவார் என்பதால் ஐபிஎல் தொடரில் கடந்த சில ஆண்டுகளாக அவருக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை.
2024 ஐபிஎல் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் வர்ணனையாளராக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், தற்போது அதிரடி வீரராக மாறி இருப்பதால் ஏதேனும் ஐபிஎல் அணி ஸ்டீவ் ஸ்மித்தை மாற்று வீரராக தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளது என ரசிகர்கள் தங்கள் எதிர்பார்ப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.


Click it and Unblock the Notifications