ஆபாச பேச்சுக்களால் கெயிலுக்கு காத்திருக்கு ஆப்பு
கான்பெரா: ஆஸ்திரேலியாவின் உள்நாட்டு டி20 கிரிக்கெட் தொடரான பிக் பாஷ் லீக்கில் மெல்போர்ன் அணிக்காக, ஆடுவதற்கு, மேற்கிந்திய தீவுகள் அணியின் கிறிஸ் கெயில் மீண்டும் ஒப்பந்தம் செய்யப்படமாட்டார் என்று அந்த அணியின் தலைமை செயல் அதிகாரி ஸ்டூவர்ட் கவன்ட்ரி தெரிவித்துள்ளார்.
கெயில் அடுத்தடுத்து ஆபாச சர்ச்சைகளில் சிக்கி வருவது இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
பிக்பாஷ் லீக்கில் மெல்போர்ன் அணிக்காக ஆடிய கிறிஸ்கெயில் பெண் நிருபரிடம் ஆபாசமாக பேசினார். இதற்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

வம்பு
இந்நிலையில் ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக ஆடிவரும் கெயில், இரு தினங்களுக்கு முன்பு பிரிட்டீஷ் பெண் பத்திரிகையாளரிடம் ஆபாசமாக பேசி வம்பில் சிக்கியுள்ளார்.

பேட் சர்ச்சை
அந்த பெண்ணிடம், என்னிடமுள்ள பேட் மிகவும் பெரியது, உங்களால் ஒரு கையால் தூக்க முடியாது, இரு கையால்தான் தூக்க முடியும் என்று இரட்டை அர்த்தத்தில் பேசி மனதை காயப்படுத்தியுள்ளார் கெயில்.

ஒப்பந்தம் இல்லை
இந்த தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் மெல்போர்ன் அணியின் தலைமை செயல் அதிகாரி ஸ்டூவர்ட் கவன்ட்ரி அளித்த பேட்டியில், "எங்கள் அணிக்காக அடுத்த பிக் பாஷ் லீக்கில் கெயிலை ஒப்பந்தம் செய்யப்போவதில்லை" என்று தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்திலும் எதிர்ப்பு
இதனிடையே இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட் தொடரில் சோமர்செட் அணிக்காக ஆடிவரும் கிறிஸ் கெயிலுக்கு தங்கள் நாட்டு பத்திரிகையாளரிடம் மோசமாக நடந்து கொண்டதற்காக எதிர்ப்பு கிளம்பும் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications