For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பெர்த் மைதானம் கன்ஃபார்ம்.. டி20 உலகக்கோப்பைக்காக டிராவிட் ஸ்பெஷல் கோரிக்கை.. பிசிசிஐ பச்சைக்கொடி!

மும்பை: டி20 உலகக்கோப்பை தொடருக்காக ராகுல் டிராவிட் வைத்த முக்கிய கோரிக்கைக்கு பிசிசிஐ பச்சைக்கொடி காட்டியுள்ளது.

இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் மோதி வருகிறது.

அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராவதற்கான போட்டியாக இது அமைந்துள்ளது.

 இந்திய போட்டிகள்

இந்திய போட்டிகள்

3 போட்டிகள் கொண்ட இந்த தொடர் வரும் செப்டம்பர் 25ம் தேதியுடன் முடிவு பெறுகிறது. இதனை தொடர்ந்து தென்னாப்பிரிக்க அணியுடன் செப்.28 முதல் அக்டோபர் 4ம் தேதி வரையில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதவுள்ளது. இது முடிந்தவுடன் அக்டோபர் 11ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு புறப்படுவதாக திட்டமிட்டிருந்தனர்.

டிராவிட்டின் கோரிக்கை

டிராவிட்டின் கோரிக்கை

ஆனால் அக்டோபர் 5ம் தேதியன்றே புறப்பட வேண்டும் என டிராவிட் முக்கிய கோரிக்கையை வைத்தார். அதாவது ஐசிசி சார்பில் இரண்டு பயிற்சி போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஆனால் இதனை தவிர மேலும் 3 பயிற்சி போட்டிகளை இந்திய அணிக்குள்ளேயாவது நடத்த வேண்டும். அதற்காக ஆஸ்திரேலியாவுக்கு முன்கூட்டியே செல்ல வேண்டும் எனக்கேட்டிருந்தார். இதே போல குறிப்பாக பெர்த் மைதானம் தான் பயிற்சிக்கு வேண்டும் எனவும் கேட்டிருந்தார்.

என்ன காரணம்

என்ன காரணம்

ஆஸ்திரேலியாவில் பெர்த் மைதானத்தின் பிட்ச்-ல் தான் அதிக வேகமும், பவுன்ஸும் இருக்கும் எனக்கூறப்படுகிறது. எனவே அங்கு நல்ல பயிற்சியை பெற்றிவிட்டால், பின்னர் மற்ற மைதானங்களில் சமாளித்துவிடலாம். எனவே அதனை மனதில் வைத்துதான் டிராவிட் கேட்டார். இதே போல பேக் -அப் வீரர்களையும் கையுடன் அழைத்து செல்வதற்கும் அனுமதி வாங்கியிருந்தார்.

பிசிசிஐ பச்சைக்கொடி

பிசிசிஐ பச்சைக்கொடி

இந்நிலையில் டிராவிட்டின் கோரிக்கைக்கு பிசிசிஐ பச்சைக்கொடி காட்டியுள்ளது. அதாவது அவர் கேட்டபடி பெர்த் மைதானம் கொடுக்கப்பட்டுள்ளது. இதே போல தென்னாப்பிரிக்க தொடர் முடிந்த அடுத்த தினமே வீரர்கள் அனைவரும் ஆஸ்திரேலியாவுக்கு புறப்படுகின்றனர்.

Story first published: Friday, September 23, 2022, 11:00 [IST]
Other articles published on Sep 23, 2022
English summary
BCCI arranged the Perth Stadium for Team India as per the Request of Head coach Rahul dravid for T20 world cup 2022
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+