Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

4வது டெஸ்ட்: யாருமே எதிர்பார்க்காத "ட்விஸ்ட்".. இளம் பெங்களூரு பவுலருக்கு அடித்த "ஜாக்பாட்"

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில், இளம் வீரரை அணியில் சேர்த்திருக்கிறது இந்திய கிரிக்கெட் நிர்வாகம்.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி, லண்டன் ஓவல் மைதானத்தில் நாளை (செப்.2) நடைபெற உள்ளது.

5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இரு அணிகளும் 1-1 என்று சமநிலையில் இருப்பதால், இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிகரித்ததுள்ளது..

 இந்தியா வெற்றி

இந்தியா வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர், எதிர்பார்த்ததைவிட சிறப்பாகவும், சுவாரஸ்யமாகவும் சென்றுக் கொண்டிருக்கிறது. நாட்டிங்கமில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், ஏறக்குறை வெற்றிக்கு அருகில் சென்றுவிட்ட இந்திய அணி, கடைசி நாளில் பெய்த மழை காரணமாக வெற்றிப் பெறும் அபார வாய்ப்பை இழந்தது. ஆனால், லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் அபாரமாக விளையாடிய இந்திய அணி,151 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலாக வெற்றிப் பெற்றது. 2வது டெஸ்ட் போட்டியில், நான்காவது நாள் வரை இங்கிலாந்து தான் ஆதிக்கம் செலுத்தியது. அவர்கள் பும்ராவை டார்கெட் செய்வதற்கு முன்பு வரை, ஆட்டம் இங்கிலாந்து கண்ட்ரோலில் தான் இருந்தது. அதன் பிறகு தான் அனைத்தும் மாறியது. பும்ரா - ஷமி இணை 9வது விக்கெட்டுக்கு 89 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்க, இந்தியா மீண்டு வந்தது. பிறகு, இங்கிலாந்தை 120 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கி வெற்றிப் பெற்றது. இங்கிலாந்து ஊடகங்கள் அந்த அணியை கடுமையாக விமர்சிக்க, 3வது டெஸ்ட் போட்டியில் ஸ்விங் தாக்குதலுடன் களமிறங்கியது இங்கிலாந்து

 2 மாற்றங்கள்

2 மாற்றங்கள்

இதன் பிறகு, ஹெட்டிங்லேவில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணியை முதல் இன்னிங்ஸில் 78 ரன்களுக்கு சுருட்டியது இங்கிலாந்து. அந்த இடத்திலேயே போட்டியை இழந்துவிட்டது இந்தியா. அதன் பிறகு எவ்வளவோ போராடியும், இந்திய அணியால் மீண்டு வர முடியவில்லை. முடிவில், இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த சூழலில் தான் நான்காவது டெஸ்ட் போட்டி நாளை (செப்.2) லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் நிச்சயம் 2 மாற்றங்கள் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, இந்திய அணியின் 11 வீரர்கள் கொண்ட பட்டியலில், லோகேஷ் ராகுல், ரோஹித் ஷர்மா, விராட் கோலி (c) , புஜாரா, அஜின்க்யா ரஹானே (wc), ரிஷப் பண்ட் (wk), ரவிச்சந்திரன் அஷ்வின், ஷர்துல் தாகூர், முகமது ஷமி, முகமது சிராஜ், பும்ரா ஆகிய வீரர்கள் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில், புஜாரா மற்றும் ரஹானே ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.

 பிரசித் கிருஷ்ணா

பிரசித் கிருஷ்ணா

இந்நிலையில், இந்திய நான்காவது டெஸ்ட் போட்டிக்கான முழு இந்திய அணி வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. 22 வீரர்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். ஆனால், இதில் புதிதாக சேர்க்கப்பட்டிருப்பவர் இளம் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா. இந்த பெங்களூரு வீரர் ரிசர்வ் வீரராக இங்கிலாந்து தொடரில் இடம் பெற்றிருந்தார். இப்போது, அவரை முதன் முதலாக நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சேர்த்திருக்கிறது. இதில் என்னவொரு ஆச்சர்யம் என்றால், எந்த வேகப்பந்து வீச்சாளரையும் மாற்றி, அவருக்கு பதில் இவரை சேர்க்கவில்லை. பும்ரா, இஷாந்த், ஷமி, சிராஜ், ஷர்துல் தாகூர், உமேஷ் யாதவ் என்று அனைத்து பவுலர்களும் அணியில் இருக்க, 22வது வீரராக பிரசித் கிருஷ்ணா ஏன் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டுள்ளார் என்பதே கேள்வியாக உள்ளது.

 இந்திய அணி வேண்டுகோள்

இந்திய அணி வேண்டுகோள்

ஃபார்மில் இல்லாத இஷாந்த் ஷர்மா நான்காவது போட்டியில் நிச்சயம் நீக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அவருக்கு பதில் ஷர்துல் தாக்கூர் சேர்க்கப்படலாம் என்றே கூறப்பட்டது. ஒருவேளை ஜடேஜா காயத்தில் இருந்து குணமடைந்துவிட்டால், இந்திய அணி இஷாந்த் ஷர்மாவை நீக்கிவிட்டு, அவருக்கு பதில் அஷ்வினை சேர்த்து 3 ஃபாஸ்ட் மற்றும் 2 ஸ்பின்னர்கள் கொண்டு களமிறங்கலாம் என்றே எதிர்பார்க்கப்பட்டது. அப்படி ஜடேஜா உடல் தகுதி பெறவில்லை என்றால், அவருக்கு பதில் அஷ்வின் சேர்க்கப்பட்டு, இஷாந்துக்கு பதில் ஷர்துல் சேர்க்கப்படுவார் என்றே தகவல்கள் வெளியாகின. ஆனால், இப்போது சம்பந்தமே இல்லாமல், இத்தனை ஃபாஸ்ட் பவுலர்கள் வெயிட்டிங்கில் இருக்கும் போது, பிரசித் கிருஷ்ணா அணியில் சேர்க்கப்பட்டுள்ளது நிச்சயம் ரசிகர்களுக்கு ஒரு சர்பிரைஸ் தான். இந்திய அணி நிர்வாகத்தின் வேண்டுகோளை ஏற்று, All-India Senior Selection Committee பிரசித் கிருஷ்ணாவை அணியில் சேர்த்திருக்கிறது.

 நான்காவது டெஸ்ட்

நான்காவது டெஸ்ட்

பிசிசிஐ வெளியிட்டுள்ள, நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி வீரர்களின் முழு பட்டியல், "ரோஹித் ஷர்மா, லோகேஷ் ராகுல், மயங்க் அகர்வால், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி (கேப்டன்), அஜிங்க்யா ரஹானே (துணை கேப்டன்), ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஆர். அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், ஜஸ்பிரித் பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், ரிதிமான் சாஹா (விக்கெட் கீப்பர்), அபிமன்யு ஈஸ்வரன், பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ், பிரசித் கிருஷ்ணா

காத்திருப்பு வீரர்: அர்சன் நக்வாஸ்வாலா

Story first published: Wednesday, September 1, 2021, 19:14 [IST]
Other articles published on Sep 1, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+