Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணிக்கு வந்த புது கண்டம்.. ஆசியக்கோப்பை -க்காக துபாய் செல்வதற்கு நிபந்தனை.. பிசிசிஐ அதிரடி!

மும்பை: ஆசியக்கோப்பை தொடருக்கான இந்திய அணி வீரர்களுக்கு மேலும் ஒரு கண்டத்தை கொடுத்துள்ளது பிசிசிஐ.

நடப்பாண்டுக்கான ஆசியக்கோப்பை தொடர் வரும் ஆகஸ்ட் 27ம் தேதி முதல் செப்டம்பர் 11 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது.

இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் கேப்டனாக ரோகித் சர்மாவும், துணைக் கேப்டனாக கே.எல்.ராகுலும் செயல்படவுள்ளனர்.

ஆசியக்கோப்பை அணி

ஆசியக்கோப்பை அணி

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்த பெரும்பாலான வீரர்களுக்கு ஆசியக்கோப்பையிலும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. இதனையடுத்து அனைத்து வீரர்களுக்கும் சிறிது ஓய்வு அளிக்கப்பட்டு, குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் அனைவருக்கும் புதிய கண்டத்தை பிசிசிஐ அறிவித்துள்ளது.

என்ன கண்டம்

என்ன கண்டம்

ஓய்வில் இருக்கும் அனைத்து வீரர்களும் இந்த வாரத்திலேயே பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் கூட வேண்டும் என சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது. அங்கு எந்தவித பாரபட்சமும் இன்றி வீரர்களுக்கு உடற்தகுதி தேர்வு நடத்தப்படவுள்ளது. இதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே ஆசியக்கோப்பை தொடருக்காக செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கே.எல்.ராகுல் நிலைமை

கே.எல்.ராகுல் நிலைமை

இந்த உடற்தகுதி தேர்வில் கே.எல்.ராகுலின் நிலைமை தான் தற்போது பெரும் குழப்பத்தை உண்டாக்கியுள்ளது. காயத்தால் அறுவை சிகிச்சை செய்துக்கொண்ட அவர் மீண்டும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். எனவே அவர் முழு உடற்தகுதியுடன் தான் இருக்கிறாரா என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது.

Recommended Video

Dhoni கொடுத்த Confidence! Deepak Chahar-ன் Motivational Speech | Cricket
ஒரு வார கால பயிற்சி

ஒரு வார கால பயிற்சி

தேர்ச்சி பெறும் வீரர்கள் அனைவரும் ஆகஸ்ட் 20ம் தேதி துபாய்க்கு புறப்படுகின்றனர். அங்கு ஒரு வார காலம் தங்கியிருந்து தீவிர பயிற்சியில் ஈடுபட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்திய அணி தனது முதல் போட்டியாக வரும் ஆகஸ்ட் 28ம் தேதி பாகிஸ்தான் அணியை எதிர்க்கிறது. இதில் டி20 உலகக்கோப்பையில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Thursday, August 11, 2022, 16:43 [IST]
Other articles published on Aug 11, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+