Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எதிர்காலம் முக்கியம்.. நீங்களே இப்படி ஆடுனா எப்படி? 2 வீரர்களுக்கு டோஸ் விட்ட பிசிசிஐ..பரபர சம்பவம்

சிட்னி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணியின் மோசமான ஆட்டத்திற்கு பின் 2 முக்கியமான வீரர்கள் மீது பிசிசிஐ கோபத்தில் உள்ளது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் தற்போது நடந்து வருகிறது. ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணியும், டி 20 தொடரில் இந்திய அணியும் வென்றுள்ளது.

டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி முதல் போட்டியை வென்றுள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மிக மோசமாக ஆடி தோல்வி அடைந்தது.

தோல்வி

தோல்வி

அதிலும் இரண்டாவது இன்னிங்ஸ்சில் இந்திய அணி வெறும் 36 ரன்கள் மட்டுமே எடுத்தது.ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணியின் மோசமான ஆட்டத்திற்கு பின் 2 முக்கியமான வீரர்கள் மீது பிசிசிஐ கோபத்தில் உள்ளது. இந்திய அணியில் டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் என்று கருதப்படும் இரண்டு வீரர்கள் ஒருவர் புஜாரா.. இன்னொருவர் ரஹானே.

இரண்டு பேர்

இரண்டு பேர்

இந்த இரண்டு பேருமே இந்திய அணியில் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடி வருகிறார்கள். இப்படி இருக்கும் போது டெஸ்ட் போட்டிகளில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இரண்டு பேருமே சரியாக ஆடவில்லை. முதல் இன்னிங்ஸ்சில் புஜரா 43 மற்றும் இரண்டாவது இன்னிங்ஸ்சில் புஜாரா டக் அவுட் ஆனார்.

வேறு யார்

வேறு யார்

இன்னொரு பக்கம் ரஹானே முதல் இன்னிங்ஸ்சில் 43 மற்றும் இரண்டாவது இன்னிங்ஸ்சில் டக் அவுட் ஆனார். இந்திய அணியால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இரண்டு பேருமே மோசமாக ஆடி சொதப்பினார்கள். இதன் மூலம் இந்திய அணியும் தோல்வி அடைந்தது. இந்த நிலையில் இந்த இரண்டு பேரையும் தனியாக அழைத்து பிசிசிஐ அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது.

பிசிசிஐ

பிசிசிஐ

இந்திய அணியில் உங்களுக்கு அனுபவம் உள்ளது. நீங்கள் பொறுப்பாக ஆட வேண்டும். உங்கள் எதிர்காலத்தை மனதில் வைத்து ஆட வேண்டும். அணியில் கோலியும் அடுத்தடுத்த போட்டிகளில் ஆட மாட்டார். அதனால் நீங்கள்தான் கவனமாக ஆட வேண்டும்.

கண்டிப்பு

கண்டிப்பு

அனுபவம் வாய்ந்த நீங்களே இப்படி ஆடினால் என்ன அர்த்தம் என்று பிசிசிஐ சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளது. அடுத்த போட்டியில் நீங்கள் நன்றாக ஆட வேண்டும் என்று பிசிசிஐ கூறியுள்ளது. பிசிசிஐ இவர்களிடம் கண்டிப்புடன் செயல்பட்டது என்கிறார்கள்.

Story first published: Monday, December 21, 2020, 23:09 [IST]
Other articles published on Dec 21, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+