For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வீரர்கள் மனைவி, காதலியோடு வெளிநாட்டு தொடர்களில் தங்கலாமா? பிசிசிஐ விதியை மாற்றிய கோலி

Recommended Video

பிசிசிஐ விதியை மாற்றிய கேப்டன் கோலி- வீடியோ

மும்பை : இந்திய அணி வீரர்கள் மனைவிகள் மற்றும் காதலிகளோடு வெளிநாட்டு கிரிக்கெட் தொடர்களில் நேரம் செலவிடக்கூடாது என இங்கிலாந்து தொடரில் உத்தரவிட்டது பிசிசிஐ.

குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே வீரர்கள் தங்கள் உறவினர் அல்லது நண்பர்களோடு தங்கலாம் என பிசிசிஐ அப்போது வெளியிட்ட உத்தரவில் கூறி இருந்தது.

இந்த உத்தரவை மாற்ற வேண்டும் என கோலி சமீபத்தில் பிசிசிஐ-யிடம் கோரியிருந்தார்.

புதிய உத்தரவு

புதிய உத்தரவு

வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின் போது இரண்டு வார காலம் மட்டுமே மனைவி, காதலிகள் அல்லது உறவினர்களோடு தங்கலாம் என பிசிசிஐ இங்கிலாந்து தொடரில் இருந்து புது உத்தரவை பிறப்பித்தது. அப்போது இங்கிலாந்தில் இந்திய அணி தொடர்ந்து தோல்விகள் சந்தித்ததே அதற்கு காரணம்.

கோலியின் கோரிக்கை

கோலியின் கோரிக்கை

இதை நீக்க வேண்டும் என்ற கோலியின் கோரிக்கையை வீரர்களின் விருப்பதை தெரிந்து கொள்ள நிர்வாக கமிட்டி ரவி சாஸ்திரி, கோலி, ரோஹித் சர்மா ஆகியோரிடம் இது குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது.

10 நாட்கள் மட்டும்

10 நாட்கள் மட்டும்

இதன் முடிவில், முதல் பத்து நாட்கள் வீரர்கள் தங்கள் நண்பர்கள், உறவினர்களுடன் தங்கக் கூடாது. அதன் பின், தொடர் முடியும் வரை தங்கிக் கொள்ளலாம் என விதியை தளர்த்தி உள்ளது பிசிசிஐ. கோலியின் கோரிக்கை எப்படியோ நிறைவேறி உள்ளது.

கோலி - அனுஷ்கா

கோலி - அனுஷ்கா

இதில் குறிப்பாக கோலி, எப்போதும் தன் மனைவி அனுஷ்கா சர்மா இல்லாமல் வெளிநாட்டு தொடர்களுக்கு செல்வதில்லை. மற்ற வீரர்களும் சமீப காலங்களில் மனைவி அல்லது காதலியோடு தான் வெளிநாட்டு சுற்றுப் பயணங்களுக்கு செல்கிறார்கள்.

Story first published: Wednesday, October 17, 2018, 15:54 [IST]
Other articles published on Oct 17, 2018
English summary
BCCI agreed to Wives and Girlfiends of players to accompany them
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X