For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

முகமது ஷமிக்கு ஓவரே கொடுக்காதீங்க.. பிசிசிஐ உத்தரவு.. ஒப்புக் கொண்ட கேப்டன்

Recommended Video

முகமது ஷமிக்கு பிசிசிஐ புதிய உத்தரவு, ஒப்புக் கொண்ட கேப்டன்- வீடியோ

மும்பை : இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவராக இருந்து வரும் முகமது ஷமி உள்ளூர் ரஞ்சி தொடரில் குறைந்த ஓவர்களே பந்துவீச வேண்டும் என பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது.

முகமது ஷமி பெங்கால் அணிக்காக ரஞ்சி தொடரில் ஆடி வருகிறார். தற்போது பெங்கால் அணி கேரளாவை எதிர் கொண்டுள்ளது.

இந்த போட்டியில் தான் ஷமி மிகக் குறைந்த ஓவர்கள் மட்டுமே வீச வேண்டும் என பிசிசிஐ உத்தரவு போட்டுள்ளது. ஏன் இந்த உத்தரவு?

ஆஸ்திரேலிய தொடரில் ஷமி

ஆஸ்திரேலிய தொடரில் ஷமி

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் நீண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ளது. அங்கே நடக்கவுள்ள டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ஷமி இடம் பிடித்துள்ளார். டி20 தொடர் வரும் நவம்பர் 21 அன்று துவங்க உள்ள நிலையில் அதற்கான அணி ஆஸ்திரேலியா சென்றுள்ளது. டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ள ஷமி பயிற்சிக்காக ரஞ்சி தொடரில் ஆடி வருகிறார். டெஸ்ட் தொடர் டிசம்பர் 6 அன்று தான் தொடங்க உள்ளது.

இத்தனை ஓவர் தான் வீச வேண்டும்

இத்தனை ஓவர் தான் வீச வேண்டும்

சமீப காலங்களில் இந்திய பந்துவீச்சாளர்கள் காயம் காரணமாக முக்கிய போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்படுகிறது. அதை கருத்தில் கொண்டு பிசிசிஐ ஷமி ரஞ்சி தொடரில் பங்கேற்றால் ஒரு இன்னிங்க்ஸில் 15-17 ஓவர்கள் மட்டுமே வீச வேண்டும் என கூறியுள்ளது. மேலும், இந்திய அணியின் இந்திய பிசியோதெரபி நிபுணராக இருக்கும் பேட்ரிக்கிடம் தினமும் தன் உடல்நிலையை பற்றிய அறிக்கையை அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

பிசிசிஐ திட்டவட்டம்

பிசிசிஐ திட்டவட்டம்

இதை ஒப்புக்கொண்டால் மட்டுமே அவரை பெங்கால் அணியில் ஆட அனுமதிப்போம் எனவும் பிசிசிஐ திட்டவட்டமாக கூறியதாக செய்திகள் வந்துள்ளன. பிசிசிஐ உத்தரவை பெங்கால் அணியின் கேப்டன் மனோஜ் திவாரி ஏற்றுக் கொண்டுள்ளார்.

ஓகே சொன்ன கேப்டன்

ஓகே சொன்ன கேப்டன்

பெங்கால் அணியின் கேப்டன் மனோஜ் திவாரி கூறுகையில், "ஷமி மிக தரமான பந்துவீச்சாளர். அவருடைய திறமை மீது எங்களுக்கு அதிக நம்பிக்கை உள்ளது. ஒரு இன்னிங்க்ஸில் 15 ஓவருக்கு மேல் அவரை வீச வைக்க வேண்டிய தேவை இருக்காது என்றே நினைக்கிறேன்" என கூறினார். முகமது ஷமி இந்த ஆண்டில் இதுவரை 33 டெஸ்ட் விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, November 18, 2018, 14:46 [IST]
Other articles published on Nov 18, 2018
English summary
BCCI allowed only 15 overs to Shami in Ranji trophy
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+