Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வங்கதேச டூருக்கான இந்திய அணி அறிவிப்பு.. ஹர்பஜன்சிங்கிற்கு வாய்ப்பு, யுவராஜ் புறக்கணிப்பு!

மும்பை: வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்ய உள்ள இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ தேர்வு குழு அறிவித்துள்ளது.

2 வருடங்களுக்கு பிறகு சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால், டெஸ்ட் போட்டிக்கான அணியில் மட்டும் அவரது பெயர் இடம்பெற்றுள்ளது. யுவராஜ் உள்ளிட்ட மூத்த வீரர்கள் இதிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

BCCI to announce team for Bangladesh tour on today

இந்திய கிரிக்கெட் அணி ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க வங்கதேசம் செல்கிறது.

டெஸ்ட் போட்டி ஜூன் 10ம் தேதி தொடங்குகிறது. ஒருநாள் போட்டிகள், அம்மாதம், 18ம் தேதி, 21 மற்றும் 24ம் தேதிகளில் நடைபெறுகிறது.

இந்த தொடர்களில் ஆடுவதற்கான இந்திய அணியை தேர்ந்தெடுக்க, பிசிசிஐ தேர்வு கமிட்டி கூட்டம், தலைவர் சந்தீப் பாட்டில் தலைமையில் மும்பையில் மதியம் 12 மணியளவில் கூடியது. சுமார் 2 மணி நேரம் ஆலோசனை நடத்திய பிறகு, வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.

ஒரு நாள் தொடருக்கான வீரர்கள்: டோணி (கேப்டன்), ரோகித் ஷர்மா, அஜிங்ய ரஹானே, ஷிகர் தவான், விராட் கோஹ்லி, ரெய்னா, அம்பத்தி ராயுடு, அஸ்வின், ஜடேஜா, அக்சர் பட்டேல், உமேஷ் யாதவ், மோகித் ஷர்மா, தவால்.

டெஸ்ட் போட்டிக்கான அணி: கோஹ்லி (கேப்டன்) முரளி விஜய், கே.எல்.ராகுல், புஜாரா, ரஹானே, ரோகித் ஷர்மா, சாகா, அஸ்வின், ஹர்பஜன்சிங், கரன் ஷர்மா, புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ், வருண் ஆரோன், இஷாந்த் ஷர்மா.

Story first published: Wednesday, May 20, 2015, 14:21 [IST]
Other articles published on May 20, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+