Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இனி ஒன்னும் பண்ண முடியாது.. இந்திய அணியின் ஓப்பனிங் உறுதியானது.. பெரும் ரிஸ்க் எடுத்துள்ள பிசிசிஐ!

மும்பை: நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்காக பிசிசிஐ ரிஸ்க் எடுத்துள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் ஜூன் 18ம் தேதி இங்கிலாந்தின் சவுத்தாம்டன் நகரில் நடைபெறுகிறது.

இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வரும் நிலையில் 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

பிசிசிஐ வெளியிட்டுள்ள 15 பேர் கொண்ட அணியில் ஓப்பனிங்கிற்காக ரோகித் சர்மா - சுப்மன் கில் ஆகிய இருவரின் பெயர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளது. கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால் என எந்த வீரரையும் பிசிசிஐ கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. விக்கெட் கீப்பிங்கில் சாஹா - பண்ட் என 2 தேர்வுகளை வைத்திருக்கும் இந்திய அணி, ஓப்பனிங்கிற்கு 2வது தேர்வையே வைக்கவில்லை.

ஓப்பனிங்

ஓப்பனிங்

ரோகித் - சுப்மன் கில் ஜோடிக்கு எதிராக முதல் சில ஓவர்களை வீசப்போவது நியூசிலாந்தின் டாப் கிளாஸ் பவுலர்களான டிம் சவுத்தி, ட்ரெண்ட் போல்ட் மற்றும் கெயில் ஜேமிசன் ஆவர். இதில் ரோகித் சர்மா அனுபவ வீரராக இருப்பினும், சுப்மன் கில்லின் ஃபார்ம் கேள்விக்குறியாக உள்ளது.

நியூசிலாந்து பவுலர்கள்

நியூசிலாந்து பவுலர்கள்

நியூசிலாந்து அணி தங்களது வேகப்பந்துவீச்சின் மீது அதீத நம்பிக்கை வைத்துள்ளது. இந்திய அணி, நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது 2-0 என்ற கணக்கில் தோற்றது. இந்த தொடரில் டிம் சவுத்தி 14 விக்கெட்களும், ட்ரெண்ட் போல்ட் 11 விக்கெட்களும் கைப்பற்றினர். இவர்களுக்கு உதவியாக கெயில் ஜேமிசன் உள்ளார்.

மோசமான ஃபார்ம்

மோசமான ஃபார்ம்

ரோகித் சர்மா இதற்கு முன்னர் ஒரே ஒரு முறை தான் இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டி விளையாடியுள்ளார். அதே போல முதல் முறையாக இங்கிலாந்து மண்ணில் ஓப்பனிங் ஆடுகிறார். கடைசியாக இந்தியாவில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் சிறப்பாக ஆடியதன் மூலம் ரோகித் சர்மா நல்ல ஃபார்மில் உள்ளார். ஆனால் மறுபுறம் சுப்மன் கில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கு பின்னர் பெரிய அளவில் ஃபார்மில் இல்லை. இங்கிலாந்து தொடரிலும் சரி, ஐபிஎல் தொடரிலும் சரி அவர் சொதப்பியுள்ளார்.

புதிய ஓப்பனிங் ஜோடி

புதிய ஓப்பனிங் ஜோடி

ரோகித்துடன் களமிறங்க மயங்க் அகர்வால் சரியாக ஜோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டது. ஏனென்றால் இந்தியா கடைசியாக நியூசிலாந்தை எதிர்கொண்ட டெஸ்ட் தொடரில் மயங்க் அகர்வால் தான் அதிக ரன்களை அடித்திருந்தார். 2 போட்டிகளில் 104 ரன்கள் அடித்தார். அகர்வாலின் பேட்டிங் முறை மற்றும் ஸ்டைல் இங்கிலாந்து களத்திற்கு நன்கு பொருந்தும் எனக்கூறப்படுகிறது. எனவே மயங்க் அகர்வால் - ரோகித் ஜோடி ஓப்பனிங் களமிறங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்திய அணி சுப்மன் கில்லை நம்பி ரிஸ்க் எடுத்துள்ளது.

15 வீரர்கள்

15 வீரர்கள்

ரோகித் சர்மா, சுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, ரஹானே, ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட், சாஹா, அஸ்வின், ஜடேஜா, பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், முகமது சிராஜ்

Story first published: Tuesday, June 15, 2021, 20:51 [IST]
Other articles published on Jun 15, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+