Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வரலாற்று முடிவை எடுத்த பிசிசிஐ.. பல ஆண்டுகள் கோரிக்கை நிறைவேற்றம்.. குவியும் பாராட்டு

மும்பை : இந்திய கிரிக்கெட்டில் இன்று வரலாற்று முடிவை பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி மற்றும் செயலாளர் ஜெய்ஷா ஆகியோர் எடுத்துள்ளனர்.

இந்திய கிரிக்கெட்டில் எப்போதும் ஆண்களுக்கு தான் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. பெண்களை பிசிசிஐ மதிப்பது இல்லை என்ற குற்றசாட்டு வைக்கப்படும்.

தற்போது அந்த குற்றச்சாட்டுக்கு முடிவு கட்டியுள்ள பிசிசிஐ, ஆடவர்களுக்கு நிகராக மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கும் பெருமையை சேர்த்துள்ளது.

ஊதிய உயர்வு

ஊதிய உயர்வு

மகளிர் கிரிக்கெட்டில் வீராங்கனை ஒருவர் சர்வதேச போட்டியில் விளையாடினால் இதற்கு முன்பு 20 ஆயிரம் ரூபாய் தான் வழங்கப்படும். ஆனால் தற்போது ஆடவருக்கு நிகராக, ஒரு டெஸ்டில் விளையாட 15 லட்சம், ஒருநாள் போட்டியில் விளையாட 6 லட்சம், டி20 போட்டியில் விளையாட 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இடைவெளி நீக்கம்

இடைவெளி நீக்கம்

இதன் மூலம், வீரர் , வீராங்கனைகளுக்கு இடையில் உள்ள ஊதிய இடைவெளி அழிக்கப்பட்டு இருக்கிறது. பிசிசிஐயின் இந்த முடிவை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். இதனிடையே, வீரர், வீராங்கனைகளுக்கு வழங்கப்படும் ஆண்டு ஊதியம் இன்னும் மாற்றப்படவில்லை.

ஆண்டு ஊதியம்

ஆண்டு ஊதியம்

விராட் கோலி போன்ற முதல் தர வீரர்களுக்கு ஆண்டுக்கு 7 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. ஆனால் மகளிர் கிரிக்கெட்டில் ஆண்டுக்கு அதிகபட்ச சம்பளமே 50 லட்சம் ரூபாய் தான். அதே போன்று ஏ பிரிவு வீரர்களுக்கு பிசிசிஐ 5 கோடி ரூபாய் வழங்குகிறது. ஆனால் மகளிருக்கு 10 லட்சம் தான். ஆடவருக்கு மூன்று கோடி என ஒரு பிரிவும், 1 கோடி என ஒரு பிரிவும் உள்ளது.

பிசிசிஐ கோரிக்கை

பிசிசிஐ கோரிக்கை

ஆனால் மகளிர் பிரிவுக்கு 50 மற்றும் 10 லட்சம் மட்டும் தான் ஆண்டுக்கு கிடைக்கிறது. ஒரு போட்டிக்கு வழங்கப்படும் ஊதியத்தை ஆடவருக்கு நிகராக மாற்றியது போல், பெண்களுக்கும் மாற்ற வேண்டும் என்று பிசிசிஐ க்கு கோரிக்கை எழுந்துள்ளது. எனினும் போட்டிக்கான ஊதியத்தை பிசிசிஐ உயர்த்தியது வெற்றிக்கு முதல் படியாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இது போன்ற முடிவை நியூசிலாந்து கடந்த ஆண்டு செய்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, October 27, 2022, 14:11 [IST]
Other articles published on Oct 27, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+