Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆட்டத்தையே மாற்றிய கேட்ச்.. வெற்றியால் கதறி அழுத கேப்டன்..U-19 இந்திய மகளிர் அணிக்கு எவ்வளவு பரிசு?

டர்பன் : தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான மகளிர் டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரை இந்திய அணி வென்று சாதனை படைத்தது.

இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொண்ட இந்திய மகளிர் அணி அபாரமாக செயல்பட்டு 68 ரன்களில் சுருட்டியது.

இதனையடுத்து, எளிய இலக்கை எதிர்கொண்ட இந்திய மகளிர் அணி 14 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

 கொண்டாட்டம்

கொண்டாட்டம்

இது ஐசிசி நடத்தும் மகளிருக்கான முதல் அண்டர் 19 டி20 உலககோப்பை என்பதால், இதில் இந்தியா வெற்றி பெற்று இருப்பது வரலாற்று சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்திய அணி வெற்றி இலக்கை எட்டியதும், இளம் வீராங்கனைகள் பலரும் மைதானத்திற்குள் வந்து வெற்றியை கொண்டாடினர்.

 கதறி அழுத கேப்டன்

கதறி அழுத கேப்டன்

குறப்பாக இந்திய சீனியர் அணியில் விளையாடிய அனுபவம் உடைய கேப்டன் செஃபாலி வர்மா, தேசிய கொடியை ஏந்தியவாறு வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மேலும், சீனியர் அணியில் உலக கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்த செஃபாலி வர்மா, ஜூனியர் அணியில் சாதனை படைத்ததை நினைத்து கதறி அழுதார்.

 அபார கேட்ச்

அபார கேட்ச்

இந்தப் போட்டியில், இங்கிலாந்து மகளிர் அணியல் ரியானா மட்டும் பொறப்பாக விளையாடி கொண்டிருந்த போது, அவர் அடித்த பந்தை அர்ச்சனா தேவி பாய்ந்து ஒரு கையால் சார்ட் கவரில் கேட்ச் பிடித்த சம்பவம், ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இந்திய ஆட்வர் அணிக்கே சவால் விடும் அளவுக்கு இன்று இந்திய வீராங்கனைகளின் ஆட்டம் இருந்தது.

 பரிசுத் தொகை

பரிசுத் தொகை

இந்த நிலையில், முதல் முறையாக நடைபெற்ற மகளிர் அண்டர் 19 உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு மொத்தமாக 5 கோடி ரூபாய் பரிசுத் தொகையை பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அறிவித்துள்ளார். மேலும் அகமதாபாத்தில வரும் புதன்கிழமை நடைபெறும் இந்தியா, நியூசிலாந்து அணிக்கு இடையிலான 3வது டி20 போட்டியை காண வரும்மாறு அழைப்பு விடுத்துள்ளார்.

Story first published: Sunday, January 29, 2023, 20:43 [IST]
Other articles published on Jan 29, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+