Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலககோப்பை முன் இந்தியா விளையாடும் தொடர்.. அதிகாரப்பூர்வ அட்டவணை வெளியீடு.. முன்பே சொன்ன Mykhel

மும்பை : வரும் செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Recommended Video

IND vs AUS | IND vs SA புதிய அட்டவணை வெளியீடு

இது தொடர்பாக மைக்கேல் இணையத்தளம் ஏற்கனவே செய்தி வெளியிட்ட நிலையில், தற்போது பிசிசிஐ அட்டவணையை வெளியிட்டுள்ளது. டி20 உலக கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய அணி தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது.

மேற்கிந்திய தீவுகள், ஜிம்பாப்வே தொடர் முடிந்தவுடன் ஆகஸ்ட் இறுதியில் ஆசிய கோப்பை டி20 தொடர் நடைபெறும்.

 ஆஸி தொடர்

ஆஸி தொடர்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் புதிய கேலரிகள் அமைக்கும் பணி நடைபெறுவதால் , எந்த ஒரு போட்டியும் சென்னையில் நடத்தப்படவில்லை. இதனால் தமிழக ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். வரும் செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலிய அணி மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக இந்தியா வரவுள்ளது.வரும் செப்டம்பர் 20ஆம் தேதி மொஹாலியில் முதல் டி20 போட்டி நடைபெறுகிறது.

 3 டி20 போட்டி

3 டி20 போட்டி

செப்டம்பர் 23ஆம் தேதி நாக்பூரில் இரண்டாவது டி20 போட்டியும், செப்டம்பர் 25ஆம் தேதி ஹைதராபாத்தில் மூன்றாவது டி20 போட்டியும் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்க அணி மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக இந்தியா வரவுள்ளது.

 தென்னாப்பிரிக்கா டி20 தொடர்

தென்னாப்பிரிக்கா டி20 தொடர்

அதன்படி செப்டம்பர் 28ஆம் தேதி முதல் டி20 போட்டி திருவனந்தபுரத்திலும் இரண்டாவது டி20 போட்டி அக்டோபர் ஒன்றாம் தேதி கவுஹாத்தியிலும், மூன்றாவது டி20 போட்டி அக்டோபர் மூன்றாம் தேதி இந்தூரிலும் நடைபெறும். இதனைத் தொடர்ந்து அக்டோபர் ஆறாம் தேதி லக்னோவில் முதல் ஒருநாள் போட்டியிலும், அக்டோபர் 9ஆம் தேதி ராஞ்சியில் இரண்டாவது ஒருநாள் போட்டியும் நடைபெறும்.

 டி20 உலககோப்பைக்கு முன்

டி20 உலககோப்பைக்கு முன்

அக்டோபர் 11ஆம் தேதி டெல்லியில் மூன்றாவது ஒருநாள் போட்டியும் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.இந்த தொடர் முடிந்தவுடன் ஆஸ்திரேலியாவுக்கு நேரடியாக செல்லும் இந்திய அணி அங்கு 2 பயிற்சி ஆட்டத்தில் பங்கே இருக்கிறது இது முடிந்தவுடன் அக்டோபர் 23ஆம் தேதி டி20 உலக கோப்பையில் இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

Story first published: Wednesday, August 3, 2022, 21:22 [IST]
Other articles published on Aug 3, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+